சென்னை: காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மெரினா கடற்கரைக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, கடற்கரை - வேளச்சேரி இடையே சனிக்கிழமை 3 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கடற்கரையில் இருந்து சனிக்கிழமை (ஜன.17) பிற்பகல் 2.50, மாலை 4.55, 6.50 ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் புறப்பட்டு, வேளச்சேரியை முறையே பிற்பகல் 3.35, மாலை 5.40, இரவு 7.35 ஆகிய நேரங்களில் சென்றடையும்.
வேளச்சேரியில் இருந்து சனிக்கிழமை மதியம் 3.30, மாலை 4.00, 5.45 ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் புறப்பட்டு, சென்னை கடற்கரையை முறையே பிற்பகல் 2.18, மாலை 4.48, 6.33 ஆகிய நேரங்களில் அடையும் என சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.