தமிழகம்

வருண் குமார் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மோகன் கணபதி

சென்னை: வருண் குமார், விக்ரமன், ரகுபதி ஆகிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சிபிசிஐடி-யில் டிஐஜியாக இருப்பவர் ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார். இவர் ஈரோடுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு சிறப்பு அதிரடிப் படைக்கான ஐஜி பதவி காலியாக உள்ள நிலையில், அந்தப் பதவிக்கு டிஐஜியை நியமிக்கும் வகையில் அதன் அந்தஸ்தை குறைத்து அந்தப் பதவிக்கு வருண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான வி.விக்ரம், டிஐஜியாக கட்டாய காத்திருப்புப் பட்டியலில் உள்ளார். தற்போது இவர், வருண் குமார் தற்போது வகிக்கும் சென்னை சிபிசிஐடி-யின் டிஐஜி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல் கண்காணிப்பாளராக கட்டாய காத்திருப்போர் பட்டியலில் உள்ள பி.ரகுபதி, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பள்ளிக்கரணைக்கான துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT