தமிழகம்

ஆயிரம் விளக்கு பகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டியவர்களை தாக்கி வழிப்பறி செய்த 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஆ​யிரம் விளக்கு பகு​தி​யில் அதிமுக வேட்​பாள​ருக்கு ஆதரவு திரட்​டிய​வர்​களைத் தாக்கி வழிப்​பறி செய்த 3 பேர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

திருச்சி மாவட்​டம், பாலக்​கரையைச் சேர்ந்​தவர் வினோத்​கு​மார் (34). இவர் கடந்த 19-ம் தேதி இரவு அவரது நண்​பர்​கள் சுரேந்​தர் மற்​றும் கவுதம் ஆகியோ​ருடன் ஆயிரம் விளக்கு பகு​தி​யில் அதி​முக வேட்​பாள​ரான பா.வளர்​ம​திக்கு ஆதர​வாக வீடு வீடாக துண்​டுப் பிரசுரம் வழங்​கி​னார்.

அப்​போது அங்கு வந்த 4 பேர், ‘பணம் கொடுத்து வாக்​காளர்​களை கவர நினைக்​கிறீர்​களா?’ எனக் கூறி தனி​யாக அழைத்​துச் சென்று தாக்கி அவர்​கள் வைத்​திருந்த ரூ.10,300, ஜிபே மற்​றும் ஏடிஎம் கார்டு மூலம் ரூ.50,000 என மொத்​தம் ரூ.60,300-ஐ பறித்​து​விட்டு தப்​பினர்.

இதுகுறித்து தேனாம்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து சிசிடிவி கேமரா பதிவு​களை ஆய்​வு செய்து அதன் அடிப்​படை​யில் வினோத் குமார் மற்​றும் நண்​பர்​களைதாக்கி வழிப்​பறி​யில் ஈடு​பட்​ட​தாக தேனாம்​பேட்டை நல்​லான் தெரு​வைச் சேர்ந்த சதீஷ் (25), அதே பகு​தி​யைச் சேர்ந்த செல்​வகு​மார் (28) மற்​றும் கிண்டி லேபர் காலனி 4-வது தெரு​வைச் சேர்ந்த சந்​திரன் (23) ஆகிய 3 பேரை நேற்று முன்​தினம் கைது செய்​து சிறையில் அடைத்தனர். தலைமறை​வாக உள்ள மேலும் ஒரு​வரை தனிப்​படை அமைத்து தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT