தமிழகம்

எல்காட் மேலாண் இயக்குநர் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: எல்காட் மேலாண் இயக்குநர் கார்த்திகேயன் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலர் சாய்குமார் வெளியிட்ட உத்தரவின் விவரம்: எல்காட் மேலாண் இயக்குநராக உள்ள கே.பி.கார்த்திகேயன் மாற்றப்பட்டு, பேரூராட்சிகள் இயக்குநராகவும், அப்பதவியில் இருந்த பி.பிரியங்கா, தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர் மின்னாளுமை முகமையின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.

இதுதவிர வெளிநாட்டு அயல்பணி முடித்து திரும்பிய பி.விஷ்ணு சந்திரன் எல்காட் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT