தமிழகம்

​திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: தமிழக அரசின் மேல்​முறையீட்டு மனு ஆக.3-ல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

செய்திப்பிரிவு

புதுடெல்​லி / சென்னை: திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் ஆண்​டு​தோறும் திருக்​கார்த்​திகை நாளன்று தீபம் ஏற்ற வேண்​டுமென்ற சென்னை உயர்​ நீ​தி​மன்ற உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனு உச்ச நீதி​மன்​றத்​தில் திங்​கட்​கிழமை விசா​ரணைக்கு வரவுள்​ளது.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கடந்​தாண்டு டிச.3-ம் தேதி தீபம் ஏற்​றக்கோரி மதுரையைச் சேர்ந்த ராமரவி​கு​மார் உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத்தாக்​கல் செய்​தனர். அந்த மனுக்​களை விசா​ரித்த சென்னை உயர்நீ​தி​மன்ற தனி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், தீபத்​தூணில் கார்த்திகை திரு​நாள் அன்று தீபம் ஏற்ற வேண்​டுமென கடந்த 2025 டிச.1-ல் உத்​தர​விட்டார்.

ஆனால், இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலை​யில்,மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர் மற்​றும் கோயில் செயல் அலு​வலர்ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இதையடுத்து ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், செயல் அலு​வலர் ஆகியோர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்​றாததற்​காக வருத்​தம் தெரி​வித்​தனர்.

இதனைதொடர்ந்​து, தனி நீதிபதி உத்​தரவை எதிர்த்து தமிழ்​நாடு அரசும், அவம​திப்பு நடவடிக்​கையை எதிர்த்து அதி​காரி​களும் உயர் ​நீ​தி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீடு செய்​தனர். அந்த மேல்​முறை​யீட்டு மனுக்​களை விசா​ரித்த மதுரை அமர்வு,அதி​காரி​களுக்கு எதி​ரான நீதி​மன்ற நடவடிக்​கைக்கு தடை​வி​தித்து உத்​தர​விட்​டது.

அதே வேளை​யில், ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை திரு​நாளன்று திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்​தது.இதனையடுத்​து, தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து மதுரை அமர்வு பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோயில் நிர்​வாகம் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

அது​போல, திருப்​பரங்​குன்​றம் தீபம் விவ​காரத்​தில் பிர​தான மனு​தா​ர​ரான ராம ரவிக்​கு​மார் சார்​பில், மதுரை அமர்​வின் இருநீதிப​தி​கள் அமர்வு பிறப்பித்த உத்​தர​வில் இடம் பெற்றுள்ள மலை உச்​சிய உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற எத்தனை பேரை அனு​ ம​திக்​கலாம் என்​பது குறித்து தொல்​லியல் துறை யுடன் ஆலோ​சித்து முடிவெடுக்க வேண்​டும் என்பது உள்ளிட்டநிபந்​தனைகளை நீக்கக் கோரி மேல் ​முறை​யீடு செய்​யப்​பட்டது.

இந்த மனுக்கள் உச்ச நீ​தி​மன்றத்​தில் நீதிப​திகள் அரவிந்த்குமார், விபுல்​.எம்​.பஞ்​சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆக.​3-ல் வி​சாரணைக்​கு வருகிறது.

SCROLL FOR NEXT