தமிழகம்

தவெக தலைமையில் கூட்டணி உருவானால் விசிக இடம்பெறும்: திருமாவளவன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: விசிக விருது வழங்​கும் விழா சென்​னை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சி​யில் விசிக தலை​வர் திரு​மாவளவன் பேசி​ய​தாவது: நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பெரும்​பான்மை இடங்​களில் வெற்றி பெற்ற கட்​சி​யாக தவெக வந்​தது.

திமுக கூட்​ட​ணி​யில் இணைந்து தேர்​தலை சந்​தித்​த​தால் எங்​களுக்கு மகிழ்ச்சி இல்​லாமல்​தான் இருந்​தது. தவெகவை நாங்​கள் விமர்​சித்​திருக்​கிறோம். ஆர்​எஸ்​எஸ் பெற்ற பிள்ளை என்று விமர்​சித்​து​விட்​டு, தற்​போது ஆதரவு கொடுக்​கிறோம்.

ஆனால் ஏன் ஆதரவு என்​பதை பலமுறை விளக்​கமளித்​துள்​ளேன். திமுக கூட்​ட​ணி​யில் தொடர்​கிறோமா என்று கேட்​கிறார்​கள். திமுக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் விசிக இல்லை என்று திமுக தலை​மையே அறி​வித்​து​விட்​டது.

இது​வரை நான் அறிவிக்​க​வில்​லை. தவெக கூட்​ட​ணி​யில் இருக்​கிறோமோ என்​றும் அறிவிக்​க​வில்​லை. தவெக கூட்​டணி தொடர்​பாக ஜூலை 1-ம் தேதி கூட்​டத்​தில் பேசி​யுள்​ளோம்.

அதில் எந்த முடி​வும் எடுக்​கப்​பட​வில்​லை. ஒரு​வேளை தவெக தலை​மை​யில் கூட்​டணி உரு​வா​னால், அதில் இடம்​பெறுவோம் அதில் எந்த ஐயமுமில்​லை.

திமுக தலை​வர்​கள் அனை​வரும் ஒன்​று சேர்ந்து விசிக​விலிருந்து ஒரு​வரை அழைத்து கட்​சி​யில் இணைத்​த​போது, திமுக தலை​மையே எங்​களு​டன் உறவு இல்லை எனச் சொல்​லி​விட்​டது. விசிக​வுடன் கூட்​டணி இல்லை என்று சொன்​னது மு.க.ஸ்டா​லின் தான்.

35 ஆண்டு உழைப்பு

திமுக கூட்​ட​ணியை விட்டு வெளியே வரக்​கூடிய அளவுக்​கான நெருக்​கடி எங்கே வந்​தது, எப்​போது வந்​தது, அதை ஏன் இன்​னும் அதி​காரப்​பூர்​வ​மாக நீங்​கள் அறிவிக்​க​வில்லை என்று கேட்​கிறவன் எனக்கு வேண்​டும்.

இந்த அரசி​யல் புரிதல் எனக்​குத் தேவை. அந்த விவாதம் நடை​பெற வேண்​டும். அதி​முக கூவிக் கூவி அழைத்​தது என்று சொல்​கிறீர்​களே, அப்​படி​யென்​றால் ஏன் அதி​முகவோடு நீங்​கள் கூட்​டணி வைக்​க​வில்லை என்ற கேள்​வியை எழுப்​பு​கிற தம்​பிகள் நமக்கு வேண்​டும். அது​தான் ஆளு​மை, அது​தான் தலை​மைத்​து​வம்.

பாஜக​விலே அமைச்​ச​ரா​னாலும் சரி, பாஜக​விலே எங்​களுக்கு ஒரு பதவி வாங்​கித் தாருங்​கள் என்று கேட்​பவர்​களாக என்​னோடு இருக்​கிறீர்​கள் என்​றால், என் 35 ஆண்​டு​கால உழைப்பு வீணாகி​விட்​டது என்று பொருள்.

அந்த அரசி​யல் புரிதல் உள்​ளவர்​களை நான் இன்​னும் வளர்த்​தெடுக்​க​வில்லை என்​று​தான் பொருள். அப்​படித்​தான் நான் நினைத்​து நொந்​து போய்​ கிடக்​கிறேன்​. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT