திருமாவளவன்

 
தமிழகம்

விபத்து, வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கும் நடைமுறை நல்லதுதான்: திருமாவளவன்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு காங்​கிரஸ் தலை​வ​ராக பொறுப்​பேற்​றுள்ள மாணிக்​கம் தாகூர் விசிக தலை​வர் திரு​மாவளவனை வேளச்​சேரி​யில் உள்ள அவரது இல்​லத்​தி​லும், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகத்தை தியாக​ராய நகரில் உள்ள கட்சி அலு​வல​கத்​தி​லும் மரி​யாதை நிமித்​த​மாக நேற்று சந்​தித்​தார்.

இந்த சந்​திப்​பு​களுக்கு பின் செய்​தி​யாளர்​களிடம் மாணிக்​கம் தாகூர் கூறிய​தாவது: மரி​யாதை நிமித்​தி​மாக இந்த சந்​திப்​பு​கள் நிகழ்ந்​துள்​ளன. இந்​திய கூட்​ட​ணி​யில் மிக முக்​கிய​மான அங்​க​மாக விசிக, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் உள்​ளன.

காவிரி விவ​காரத்தை பொறுத்​தவரை தமிழக காங்​கிரஸ் எப்​போதும் தமிழக விவ​சா​யிகளின் பக்​கம்தான். இந்த விவ​காரத்​தில் தமிழகத்​தில் உள்ள அனைத்து கட்​சிகளும் ஒத்த கருத்​துடன் உள்​ளன.

முன்​ன​தாக வேளச்​சேரி​யில் திரு​மாவளவன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விபத்​தில், வன்​முறை​களில் பலி​யானவர்​களின் குடும்​பத்​தினருக்கு இழப்​பீடு வழங்​கு​ வதையும், அடுத்த தலை​முறை​யினரை பாது​காக்க அரசு பணி வழங்​கு​வதையும் விசிக ஏற்​கெனவே வலி​யுறுத்​தி​யுள்​ளது.

கட்சி சார்ந்து பார்க்​காமல் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு அரசு உதவ வேண்​டும் என்ற பார்வை முக்​கிய​மானது. இது​போன்று பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு அரசு பணி வழங்​கும் நடை​முறை நல்​லது என கருதுகிறேன்.

காவிரி விவ​காரத்​தில் முதல்​வர் பேச​வில்லை என்று எடுத்​துக் கொள்ள வேண்​டாம். தவெக அரசுக்கு ஆதரவு தெரி​வித்து இருக்​கும் கட்சித் தலை​வர்​கள் நான் உட்பட கூட்​டணி கட்சித் தலை​வர்​கள் பேசுகிறார்​கள் என்றார்.

SCROLL FOR NEXT