விசிக தலைவர் திருமாவளவன்

 
தமிழகம்

விஜய்யின் நோக்கம் என்ன? - திருமாவளவன் சொல்கிறார்

செய்திப்பிரிவு

அ​தி​முக-​பாஜக ஆட்​சியை அமர்த்​து​வது​தான் விஜய்​யின் ஒரே நோக்​க​மாக இருக்​கிறது என விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் தேர்​தல் அறிக்​கையை கட்​சி​யின் தலை​வர் திரு​மாவளவன் நேற்று சென்​னை​யில் வெளி​யிட்​டார்.

          

தொடர்ந்து அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்தி திணிக்​காத இரு​மொழிக் கொள்​கை, கடலும் காடும் கனிம​மும் நமதே, விலை​யில்​லாத கல்​வியைப் பெறு​வோம், மருத்​து​வத்தை அடிப்​படை உரிமை​யாய் ஆக்​கு​வோம், மக்​கள் தொகைக்​கேற்ப இட ஒதுக்​கீடு, மகளிருக்கு 50 விழுக்​காடு இட ஒதுக்​கீடு, தனி​யார் துறை​யிலும் சமூக நீதி, உழுபவ​ருக்கு நிலம் இருப்​பவ​ருக்கு இடம், சிறு​பான்​மை​யினரைக் காக்க சிறப்​புச் சட்​டம், காவல் துறை சிறைத் துறை சீர்​திருத்த பாடு​படு​வோம், மது, போதைப்​பொருட்​களை ஒழிப்​போம், ஆணவக் கொலை​களைத் தடுத்​திட சிறப்​புச் சட்​டம் இயற்​றிட வியூ​கம் அமைத்து போராடு​வோம் என 12 கருப்​பொருள்​களை அடிப்​படை​யாகக் கொண்டு கொள்கை அறிக்கை வரையறுக்​கப்​பட்​டுள்​ளது.

தேர்​தல் ஆணை​யம் சுதந்​திர​மாகச் செயல்​பட​வில்​லை, பாஜக கட்​டுப்​பாட்​டில் இயங்​கு​கிறது. தமி​ழ​கத்​தில் திமுக கூட்​டணி மற்​றும் அதி​முக கூட்​டணி என்ற இரு முனைப் போட்​டி​தான்.திமுகவை எதிர்க்​கிறேன் என்ற பெயரில் அதி​முக, பாஜக​வுக்கு சாதக​மாக விஜய் வேலை செய்​கி​றார். அவரால் ஆட்சி வர முடி​யாது என்று தெரிந்​தும், அவர் திமுக அகற்​றப்​படும் எனத் தெரி​வித்​துள்​ளார். இதி​லிருந்து அதி​முக-​பாஜக ஆட்​சியை அமர்த்​து​வது​தான் அவரின் ஒரே நோக்​க​மாக இருக்​கிறது என்​பது தெளி​வாகிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT