அமைச்சர் அருண்ராஜ்

 
தமிழகம்

“தவெக ஆட்சியில் சிறு குறைகள் இருக்கத்தான் செய்கின்றன” - அமைச்சர் அருண்ராஜ் ஒப்புதல்

செய்திப்பிரிவு

திருச்சி: தவெக ஆட்​சி​யில் சிறு குறைகள் இருக்​கத்​தான் செய்​கின்​றன என்று தமிழக மருத்​து​வம் மற்​றும் மக்​கள் நல்​வாழ்​வுத் துறை அமைச்​சர் அருண்​ராஜ் தெரி​வித்​துள்​ளார்.

திருச்​சி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: தமிழகம் முழு​வதும் காலியாக இருந்த 4,724 செவி​லியர் பணி​யிடங்​கள் அந்​தந்த மாவட்ட நலச் சங்​கங்​கள் மூலமாக வெளிப்​படை​யான முறை​யில் நிரப்​பப்​பட்டு, பணி நியமன ஆணை வழங்​கப்​பட்​டுள்​ளது. எனவே, இனி செவி​லியர் பற்​றாக்​குறை இருக்​காது. மேலும், உயர் சிறப்பு மருத்​து​வர்​கள் பற்​றாக்​குறையைப் போக்க புதிதாக 284 உயர் சிறப்பு மருத்​து​வப் பணி​யிடங்​கள் உரு​வாக்​கப்​பட்டு, அவற்​றுக்​கான நியமன அறி​விப்​பு​களும் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி இய​லாமையில் இருப்​ப​தால், தவெக ஆட்​சிக்கு மைனஸ் பூஜ்​யம் மதிப்​பெண் வழங்​கு​வ​தாகக் கூறியுள்​ளார். ஏதாவது பேச வேண்​டும் என்​ப​தற்​காக அவர் அப்​படி சொல்​கிறார். 6 மாத ஆட்​சி​யைப் பற்றி மக்​கள் என்ன சொல்​கிறார்​கள் என்​பதை கேட்​டுப் பாருங்​கள்.

மக்​கள் மிகவும் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறார்​கள். ஊழலின்றி, நேர்​மையாக மக்​களுக்கு நல்​லது செய்ய வேண்​டும் என்ற ஒரே நோக்​கத்​துடன் முதல்​வர் ஆட்சி நடத்தி வரு​கிறார். ஆட்​சி​யில் ஆங்​காங்கே சிறு குறைகள் இருக்​கத்​தான் செய்​கின்​றன. அவை சரி செய்​யப்​படும். அரசின் நோக்​கத்தை மக்​கள் தெளிவாக புரிந்து வைத்​துள்​ளார்​கள். இவ்​வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT