தமிழகம்

மே 11ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம்

பால. மோகன்தாஸ்

சென்னை: 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நாளை காலை 9.30 மணிக்கு கூடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முதன்மைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கூடுகிறது. அன்றைய தினத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டிருப்பவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்க இருக்கிறார்கள்.

தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சட்டப் பேரவை உறுப்பினராக பதவியேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சட்டப்பேரவையின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் வரும் 12ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளிலும், திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 5, பாமக 4, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2, ஐயுஎம்எல் 2, பாஜக 1, தேமுதிக 1 ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT