தமிழகம்

போக்குவரத்துத் துறையில் 400 ஊழியர் பணிநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அரசுக்கு தவாக வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்துத் துறை​யில் 400 ஊழியர்​களின் பணிநீக்க நடவடிக்​கையை அரசு மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என்று தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழக போக்​கு​வரத்து துறை​யின் கீழ் நீண்ட கால​மாக பணி ​யாற்​றும் சுமார் 400 ஊழியர்​களின்திடீர் பணிநீக்க நடவடிக்கை கடும் அதிர்ச்​சி​யை​யும் வேதனையை​யும் அளிக்​கிறது.

பல ஆண்​டு​களாக போக்​கு​வரத்​துத் துறை பணி​களில் தங்​களை அர்ப்​பணித்​து, தங்​களது இளமை காலத்​தை​யும் உழைப்​பை​யும் செல​விட்​ட​வர்​களை ஒரு நிர்​வாக உத்​தர​வின் மூலம் வாழ்​வா​தா​ரம் அற்​றவர்​களாக மாற்​று​வது எந்த வகை​யிலும் நியாய​மானது அல்ல.

போக்​கு​வரத்​துத் துறை​யில் சேவை​கள் மற்​றும் உரிமம் தொடர்​பான பணி​களில் ஈடு​பட்டு வந்த இவர்​களின் அனுபவத்தை பயன்​படுத்​திக் கொள்ள ஏராள​மான வாய்ப்​பு​கள் இருக்​கும் போது, பணிநீக்​கமே ஒரே தீர்வு என்ற நிர்​வாக மனப்​பான்மை ஏன் என்ற கேள்வி எழுகிறது.

400 ஊழியர்​கள் என்ற எண்​ணிக்​கை​யின் பின்​னால் 400 குடும்​பங்​கள் உள்​ளன. அந்​தக் குடும்​பங்​களின் உணவு, குழந்​தைகளின் கல்​வி, மருத்​து​வச் செல​வு​கள், வீட்டு வாடகை, கடன் சுமை​கள் என அன்​றாட வாழ்க்​கை​யின் அத்​தனை தேவை​களும் இருக்​கின்​றன.

எனவே, இந்த விவ​காரத்தை வெறும் நிர்​வாகப் பிரச்​சனை​யாகக் கரு​தாமல், 400 குடும்​பங்​களின் வாழ்​வா​தா​ரத்​துடன் தொடர்​புடைய மிக முக்​கியப் பிரச்​சினை​யாக தமிழக அரசு அணுக வேண்​டும்.

பணிநீக்க நடவடிக்​கையை உடனடி​யாக மறு​பரிசீலனை செய்​து, ஊழியர்​களின் பணிப் பாது​காப்பு, பணி நிரந்​தரத்தை உறுதி செய்​வதோடு, தேவை​யான இடங்​களில் மாற்​றுப்​பணி, மறு​ப​யிற்சி அல்​லது பணி​யிட மாற்​றம் போன்ற மாற்று வழிகளை உரு​வாக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT