திருமாவளவன் | கோப்புப் படம் 
தமிழகம்

மாற்றுத் திறனாளிகளுக்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டம்: திருமாவளவன் பாராட்டு

வெற்றி மயிலோன்

சென்னை: கட்டணமில்லா பேருந்து சேவைக்கான வெற்றிப் பயணத் திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தியதற்காக முதல்வர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசு வெற்றிப் பயணத் திட்டத்தின் மூலம் கட்டணமில்லா பேருந்து சேவை தற்போது பெண்கள் மற்றும் திருநர்களுக்கு விரைவு (Express), குறைந்த நிறுத்தங்கள் கொண்ட சேவை (LSS), சொகுசு (Deluxe) பேருந்துகளுக்கு நீட்டிக்கப்பட்டு இதனை முதல்வர் விஜய் துவக்கி வைத்துள்ளது பாராட்டுக்குரியது.

பெண்கள், திருநர் போன்றே அரசின் சிறப்பு கவனம் தேவைப்படுகிற சமூகமான மாற்றுத் திறனாளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கடந்த 09.09.2026 அன்று முதல்வர் விஜய்யிடம் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கோரிக்கைக் வைக்கப்பட்டது.

தற்போது தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்தும் வகையில் இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT