தமிழகம்

டெண்டர் முறைகேடு: மின் வாரிய அதிகாரிகள் 2 பேர் இடைநீக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: டெண்​டர் முறை​கேடு காரண​மாக மின்​வாரிய அதிகாரி​கள் 2 பேர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதுகுறித்து மின் வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: தமிழ்​நாடு மின்​வாரிய தலைமை அலுவலகத்தில் எரிசக்தி வளம் மற்​றும் சட்​டத்​துறை அமைச்​சர் சி.டி.ஆர். நிர்​மல்​கு​மார் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

அப்போது தமிழ்​நாடு பசுமை எரிசக்தி கழகத்​தின் சமீபத்​திய டெண்டர் ஒதுக்​கீடு மற்​றும் ஒப்​புதல் வழங்​கிய​தில் வெளிப்​படை தன்மை இல்​லாமல், அவசரக​தி​யில் ஒப்​புதல்​கள் வழங்கப்பட்டிருப்பது தெரிய​வந்​தது.

மேற்​கண்ட குற்​றச்​சாட்​டு​களின் அடிப்​படை​யில் முறை​யான விசா​ரணை நடப்​ப​தற்​கு, தலைமை நிதிக்​கட்​டுப்​பாட்டு அலு​வலர் (வரு​வாய்) வி.​காசி மற்​றும் மரபு​சாரா எரிசக்தி தலைமை பொறி​யாளர் பி.சந்​திரசேகரன் ஆகியோர் தற்​காலிக பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். மேலும், மேற்​கூறிய குற்​றச்​சாட்​டு​களில் தொடர்​புடைய ஓய்​வு​பெற்ற இயக்​குநர் (தொழில்​நுட்​பம்) பசுமை எரிசக்தி கழகம் எஸ்​.மங்​கள​நாதனின் ஓய்​வூ​தி​யப் பலன்​கள் அனைத்​தும் தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது.

சம்​பந்​தப்​பட்ட அலு​வலர்​கள் மீது துறைரீ​தி​யான முறை​யான விசா​ரணை நடை​பெற்று மின்​வாரிய விதி​முறை​களின்​படி மேல்​நட​வடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்​ளது.

SCROLL FOR NEXT