தமிழகம்

கலங்கரை விளக்கம் முதல் அடையாறு வரை உயர்மட்ட சாலைக்கு திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகரின் முக்​கிய பகுதி​யான காம​ராஜர் சாலையில் கலங்​கரை விளக்​கம், மெரினா கடற்​கரை, டிஜிபி அலு​வல​கம், அரசு அலு​வல​கங்​கள், பள்ளி-கல்​லூரி​கள் அமைந்​துள்​ளன.

இத​னால் காலை முதல் இரவு வரை அந்​தப் பகுதி​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் காணப்​படுவது வழக்​க​மாக இருக்​கிறது.

இதற்கு தீர்வு காணும் வகை​யில் மெரினா கலங்​கரை விளக்​கம் முதல் அடை​யாறு திரு​விக பாலம் வரை 4 கி.மீ. தூரத்​துக்கு உயர்​மட்ட சாலை அமைக்க தமிழக அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

இதற்​கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்​ப​தற்​கான டெண்​டரை நெடுஞ்​சாலைத்​துறை​யின் சென்னை நகர சாலைகள் கோட்​டம் கோரியுள்​ளது. இந்த திட்ட அறிக்கை டெண்​டரின் மொத்த மதிப்பு ரூ.38.10 லட்​ச​மாக நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி இந்த திட்ட அறிக்கை தயாரிக்​கும் பணியை 2 மாதங்​களுக்​குள் முடிக்க இலக்கு நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது. உயர்​மட்​டச் சாலை​யின் சீரமைப்பு, போக்​கு​வரத்து நில​வரம், மண்​ணின் தன்மை, கட்​டு​மான வடிவ​மைப்பு உட்​பட பல்​வேறு அம்​சங்​கள் குறித்த ஆய்வு இந்த திட்ட அறிக்​கையை தயாரிக்​கும் பணி​யில் மேற்​கொள்​ளப்​பட உள்​ளன.

இந்த டெண்​டர் பெற விண்​ணப்​பிக்க ரூ.29,500 முன்​வைப்​புத் தொகை​யாக ஆன்​லைனில் செலுத்த வேண்​டும். டெண்​டர் பெறு​பவர், ஒப்​பந்​தத்தை நிறைவேற்​று​வதற்​காக கூடுதலாக ரூ.46,800 பாது​காப்பு தொகையை செலுத்த வேண்​டும்.

டெண்​டர் ஆவணங்​களை தமிழக அரசின் இணை​யதளத்​தில் https://tntenders.gov.in இல​வச​மாகப் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். ஆன்​லைனில் டெண்​டரை நவ. 2-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும் என்​றும் டெண்​டர் ஆவணத்​தில் கூறப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT