பள்ளிக்கல்வித் துறை 
தமிழகம்

மாதிரிப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி மாறுதலில் செல்ல தற்காலிகத் தடை

பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: அரசு மாதிரிப் பள்​ளி​களில் பணி​யாற்றி வரும் ஆசிரியர்​கள் பணி மாறு​தலில் செல்ல பள்​ளிக்​கல்​வித் துறை தற்​காலிக​மாக தடை விதித்​துள்​ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்வி இயக்​குநரகம் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை: தமிழகத்​தில் 38 மாவட்​டங்​களி​லும் அரசு மாதிரிப் பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன.

மாற்​றுப் பணி மற்​றும் பணி மாறு​தலில் இப்​பள்​ளி​களில் பணி​யாற்றி வரும் முது​நிலை ஆசிரியர்​கள், கணினி பயிற்​றுநர்​கள் கடந்த ஜூலை 8-ம் தேதி நடை​பெற்ற பொது மாறு​தல் கலந்​தாய்​வில் பங்​கேற்க அனு​மதி வழங்​கப்​பட்​டது. இதையடுத்​து, முது​நிலை ஆசிரியர்​கள் கலந்​தாய்​வில் பங்​கேற்று வேறு மேல்​நிலைப் பள்​ளி​களை தேர்வு செய்து இடமாறு​தல் ஆணை​களைப் பெற்​றனர்.

தற்​போது நிர்​வாக காரணங்​களுக்​காக​வும், ஏற்​கெனவே ஆசிரியர்​களுக்கு மாதிரிப் பள்​ளி​களில் சிறப்பு பயிற்​சிகள் அளிக்​கப்​பட்​டுள்​ள​தா​லும், மாதிரிப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​கள் நலன் கரு​தி​யும் அந்த ஆசிரியர்​கள் தொடர்ச்​சி​யாக மாதிரிப் பள்​ளி​யிலேயே மாற்​றுப் பணி​யில் ஈடுபட ஆணை வழங்​கு​மாறு தமிழ்​நாடு மாதிரிப் பள்​ளிக் குழு உறுப்​பினர் செயலர் கேட்டுக் கொண்​டுள்​ளார்.

அதை ஏற்​று, பொது மாறு​தல் கலந்​தாய்​வில் கலந்​து​கொண்டு பணி மாறு​தல் பெற்று சம்​பந்​தப்​பட்ட பள்​ளி​யில் பணி ஏற்​றுக்​கொண்ட முது​நிலை ஆசிரியர்​களுக்கு மீண்​டும் மாதிரிப் பள்​ளி​களி​லேயே மாற்​றுப் பணி வழங்​கப்​படு​கிறது. மறு உத்​தரவு வரும் வரை மாதிரிப் பள்​ளி​களில் அவர்​கள் மாற்​றுப்பணி​யில் ஈடு​படும் வகை​யில் பணி விடு​விப்பு ஆணை வழங்க வேண்​டும். அவர்​கள் மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பில் பணிபுரிய​வில்லை என்​பதை உறு​தி​செய்ய சம்​பந்​தப்​பட்ட தலைமை ஆசிரியர்​களுக்கு அறி​வுறுத்த வேண்​டும்.

அதே​போல, மாதிரிப் பள்​ளி​களில் மாற்​றுப் பணிக்​குச் செல்​வ​தால் அரசுப் பள்​ளி​களில் கற்​பித்​தல் பணியை தொடர, பள்ளி மேலாண்​மைக் குழு (எஸ்​எம்​சி) மூல​மாக தற்​காலிக ஆசிரியர்​களை நியமிக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT