பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் மனு அளித்த தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தினர்.

 
தமிழகம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அமைச்சர் சேகர்பாபுவிடம் கோயில் பணியாளர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு திருக்கோயில் தொழிலா​ளர்​கள் சங்​கத்​தின் மாநில சிறப்பு மாநாடு, கடந்த ஆண்டு அக்​.11-ம் தேதி சென்​னை​யில் நடை​பெற்​றது. இந்த மாநாட்​டின் போது, கோயில் பணி​யாளர்​கள் பல்​வேறு கோரிக்​கைகளை இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் பி.கே.சேகர் பாபு​விடம் வலி​யுறுத்​தினர்.

குறிப்​பாக, வீட்டு வாடகைப்​படி, நகர ஈட்​டுப்​படியை உயர்த்தி வழங்க வேண்​டும். கோயி​லில் பணிபுரி​யும் தினக்​கூலி, தொகுப்​பூ​திய பணி​யாளர்​களை பணி வரன்​முறை செய்ய வேண்​டும்.

          

மாத ஓய்​வூ​தி​யத் தொகை​யான ரூ.5 ஆயிரம் அடிப்​படை​யாகக் கொண்​டு, ஓய்வு பெற்ற கோயில் பணி​யாளர்​களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்​டும்.

கோயில் வரு​மானத்​தில் 40 சதவீத சம்பள தொகை அங்​கீகரிக்​கப்​பட்​டுள்​ளதை பொது நிதி​யாக ஏற்​படுத்​தி, அதன் மூல​மாக கோயில் பணி​யாளர்​களுக்கு மாதச் சம்​பளம் வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகள் முன் வைக்​கப்​பட்​டன.

ஆனால், இது​வரை கோரிக்​கைகள் நிறைவேற்​றப்படாததால், தமிழ்​நாடு திருக்கோயில் தொழிலா​ளர்​கள் சங்​க கவுரவத் தலை​வர் முத்​து​சாமி, துணைத் தலை​வர் சு.தன​சேகர் தலை​மை​யில் நிர்​வாகி கள் நேற்று மீண்​டும் அமைச்​சர் சேகர்​பாபுவைச் சந்​தித்து கோரிக்​கைகளை வலி​யுறுத்​தினர். அப்போது, கோரிக்​கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அவர் உறுதி அளித்தார்.

SCROLL FOR NEXT