தமிழகம்

பணி வரன்முறை செய்ய கோயில் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: பு​திய பணி​யாளர் தேர்வு வாரி​யம் அமைப்​ப​தற்கு முன் தினக்​கூலி, தொகுப்​பூ​திய ஊழியர்​களை பணி வரன்முறை செய்ய வேண்​டும் என கோயில் தொழிலா​ளர்​கள் சங்​கம் கோரிக்கை விடுத்​துள்​ளது.

இதுகுறித்து தமிழ்​நாடு திருக்​கோ​யில் தொழிலா​ளர்​கள் சங்​கம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நடந்து முடிந்த சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரில் அறநிலை​யத்​துறை மானியக் கோரிக்​கை​யின் போது கோயில்​களில் பணி புரிந்து வரும் தற்​காலிக தினக்​கூலி மற்​றும் தொகுப்​பூ​திய பணி​யாளர்​களை பணி வரன்முறை செய்​வதற்கு அறி​விப்பு வெளி​யாகும் என எதிர்​பார்த்​தோம்.

ஆனால், அதுதொடர்​பான அறி​விப்பு வெளி​யாக​வில்​லை. இதனால், தினக்​கூலி, தொகுப்​பூ​திய பணி​யாளர்​கள் 1,500 பேர் மட்​டும் அல்​லாமல், அவர்​களின் குடும்​பத்​தினர் சுமார் 10 ஆயிரம் பேரும் விரக்​தி​யில் உள்​ளனர்.

சட்​டப்​பேரவை அறி​விப்​பில் கோயில்​கள் மற்​றும் கல்வி நிறு​வனங்​களின் நேரடி நியமனக் காலிப் பணி​யிடங்​களுக்கு வெளிப்​படைத் தன்​மை​யுடன் தகு​தி​யானவர்​களை தேர்வு செய்ய புதிய பணி​யாளர் தேர்வு வாரி​யம் அமைக்​கப்​படும் என அமைச்​சர் அறி​விப்பு வெளி​யிட்​டார்.

இதனை வரவேற்​கிறோம். புதி​தாக கோயில்​ பணி​யாளர் தேர்வு வாரி​யம் அமைக்​கப்​படு​வதற்கு முன்​பாக தற்​போது தினக்​கூலி, தொகுப்​பூ​திய பணி​யாளர்​களாக பணிபுரிந்து வரும் 1,500 பணி​யாளர்​களை பணி வரன்முறை செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT