தமிழகம்

காவல் நிலையம் செல்லாமல் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதியில் தொழில்நுட்பச் சிக்கல்

சிஎஸ்ஆர் ரசீதை பதிவிறக்கம் செய்ய முடியாமல் அவதி

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: காவல் நிலை​யங்​களுக்​குச் செல்​லாமல் ஆன்​லைன் மூலம் புகார் அளித்து, அதற்​கான மின்​னணு சிஎஸ்ஆர் ரசீதைப் பெற்​றுக்​கொள்​ளும் வசதியை தமிழக காவல்​துறை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது.

ஆனால், ரசீதைப் பதி​விறக்​கம் செய்​வதிலும், புகார் மீதான நட​வடிக்கை விவரங்​களைப் பெறு​வதிலும் சிக்​கல்​கள் இருப்​ப​தாகப் புகார்​கள் எழுந்​துள்​ளன. தமிழக காவல் துறை​யின் இந்த வசதி​யின்​படி, பொது​மக்​கள் ஆன்​லைன் மூலம் புகார்​களைப் பதிவு செய்​ய​லாம்.

இதற்​கான சிஎஸ்ஆர் ரசீதையும் இணை​யதளம் வழி​யாகப் பதி​விறக்​கம் செய்து​கொள்​ளலாம். இதற்​காகப் புகார்​தா​ரரின் செல்​போன் எண்​ணுக்கு சிஎஸ்ஆர் எண், ஆண்டு, பதிவு செய்​யப்​பட்ட தேதி உள்​ளிட்ட விவரங்​கள் குறுஞ்​செய்​தி​யாக அனுப்​பப்​படு​கின்​றன.

ஆனால் இணை​யதளத்​தில் ரசீதைப் பதி​விறக்​கம் செய்​யும்​போது, புகார் பதிவு செய்​யப்​பட்ட துல்​லிய​மான நேரத்​தையும் உள்​ளீடு செய்ய வேண்​டியுள்​ளது. குறுஞ்​செய்​தி​யில் அந்த நேரம் குறிப்​பிடப்​படாததால் ரசீதைப் பதி​விறக்​கம் செய்ய முடி​யாமல் புகார்​தா​ரர்​கள் சிரமப்​படு​கின்​றனர்.

சர்​வர் தாமதத்​தால் குறுஞ்​செய்தி வந்த நேரத்​துக்​கும் கணி​னி​யில் பதிவு செய்​யப்​பட்ட நேரத்​துக்​கும் வேறு​பாடு ஏற்​படுவ​தாகவும் கூறப்​படு​கிறது. இது​குறித்து வழக்​கறிஞர் பா.ஜெய​வேல் கூறிய​தாவது: இந்​தத் திட்​டம் வரவேற்​கத்​தக்​கது.

ஆனால், குறுஞ்​செய்​தி​யில் புகார் பதிவு செய்​யப்​பட்ட நேரம் இடம்​பெறாததால் சிஎஸ்ஆர் ரசீதைப் பதி​விறக்​கம் செய்ய முடிய​வில்லை. இத​னால் மீண்​டும் காவல் நிலை​யத்​துக்​குச் செல்ல வேண்​டியுள்​ளது.

அதேபோல் விசா​ரணைக்​குப் பிறகு புகார்​தா​ரருக்​குத் தெரியாமலேயே சில சிஎஸ்ஆர்​கள் முடித்து வைக்​கப்​படுவ​தாகவும் குறுஞ்​செய்​தி​கள் வரு​கின்​றன. அதன் விவரங்​களைப் பெறவும் காவல் நிலை​யம் செல்ல வேண்​டியுள்​ளது.

புகார்​தா​ரருக்கு அனுப்​பப்​படும் குறுஞ்​செய்​தி​யில் முழு​மையான தகவல்​கள் இடம்​பெற வேண்​டும். சிஎஸ்ஆர் முடித்து வைக்​கப்​பட்​டதற்​கான காரணத்​தையும் தெரி​விக்க வேண்​டும். அப்​போது​தான் இத்​திட்​டம் முழு​மையாகப் பயனளிக்​கும் என்​றார்.

எனவே, குறுஞ்​செய்​தி​யில் புகார் பதிவு செய்​யப்​பட்ட நேரத்​தையும், சிஎஸ்ஆர் முடிக்​கப்​பட்​டதற்​கான காரணத்​தையும் குறிப்​பிடுவதுடன், ரசீதைப் பதி​விறக்​கம் செய்​யும் நடைமுறையை எளிமைப்​படுத்த அதி​காரி​கள் நட​வடிக்கை எடுக்க வேண்​டும் எனப் பொது​மக்​களும் வலியுறுத்து​கின்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT