கோப்புப் படம்
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் பல நாட்களாக போராடி வருகின்றனர்.
அந்தவகையில், இன்று காலை சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்த முயன்ற ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியான இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்க்கு சம வேலைக்கு சம ஊதியம் என்பதை நிறைவேற்ற வலியுறுத்தி தான் ஆசிரியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.