பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று 9-ம் நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எல்.சீனிவாசன் |

 
தமிழகம்

சென்னை | டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: பணி நிரந்​தரம் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி கடந்த பிப்​.3-ம் தேதி முதல் டாஸ்மாக் தொழிற்​சங்​கங்​களின் போராட்​டக் குழு போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கிறது.

குறிப்​பாக, 23 ஆண்​டு​களாக பணி​யாற்​றும் தற்​காலிக பணி​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும், கால​முறை ஊதி​யம் வழங்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

          

கடந்த செவ்​வாய்க்​கிழமை டாஸ்மாக் பணி​யாளர்​களை குடும்ப உறுப்​பினர்​களு​டன் கோட்​டையை நோக்கி பேரணி​யாகச் செல்ல முயன்​றனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதனை தொடர்ந்து எழும்​பூரில் உள்ள டாஸ்மாக் தலை​மையகம் அருகே தொடர் காத்​திருப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில் நேற்று கூட்டு நடவடிக்கை குழு சார்​பில் மதி​யம் 12 மணி முதல் 3 மணி வரை கடையடைப்பு போராட்​டம் நடத்​தப்​பட்​டது. தமிழகம் முழு​வதும் இந்த கடையடைப்பு போராட்டம் நடந்தது.

SCROLL FOR NEXT