தமிழகம்

ஊதிய உயர்வுக்கு ஏற்ப டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளக் கணக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: தமி​ழ​கத்​தில் உள்ள டாஸ்​மாக் கடைகளில் 22,877 பணியாளர்​கள் உள்​ளனர். இவர்​களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்​பட்டு கடந்த செப்​.1-ம் தேதி முதல் வழங்​கப்​பட்டு வருகிறது.

அதன்​படி, மேற்​பார்​வை​யாள​ருக்கு ரூ.28,750, விற்​பனை​யாளருக்கு ரூ.26,340, உதவி விற்​பனை​யாள​ருக்கு ரூ.24,928 வழங்​கப்​படும். டாஸ்​மாக் பணி​யாளர்​களின் சம்பள கணக்கு எஸ்​பிஐ வங்​கி​யில் உள்ள நிலை​யில் அவர்​களின் ஊதி​யத்​துக்கு ஏற்ப அவர்​களின் கணக்​கு​களும் மேம்​படுத்​தப்​படு​கிறது. அதன்​படி ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் நிகர ஊதி​யம் பெறும் மேற்​பார்​வை​யாளர், விற்​பனை​யாள​ருக்கு கோல்ட் பேக்​கேஜ் ஆக மேம்படுத்தப்படுகிறது.

இதில் அவர்​களுக்கு ரூ.50 லட்​சம் வரை விபத்து மரணக் காப்​பீடு உள்​ளிட்ட சலுகை​களும், உதவி விற்​பனை​யாள​ருக்கு சில்​வர் பேக்கேஜ் ஆக ரூ.30 லட்​சம் வரை விபத்து மரணக் காப்​பீடு உள்ளிட்ட சலுகை​களும் கிடைக்​கும். அதனை சரி​பார்த்து அக்​.15-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும் என நிர்​வாக இயக்​குநர் சுற்றறிக்கை அனுப்​பி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT