தமிழகம்

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் மீண்டும் காத்திருப்பு போராட்டம்

செய்திப்பிரிவு

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்புகள் தெளிவாக இல்லாததாக கண்டனம் தெரிவித்து, நேற்று முதல் மீண்டும் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கடந்த பிப்.1ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தியது. போராட்டக் குழுவினருடன் அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்று வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

          

கடந்த 4ம் தேதி அவர்களது கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு சில அறிவிப் புகள் வெளியிடப்பட்டன. ஆனால், இந்த அறிவிப்புகள் தெளி வாக இல்லை என்று கண்டனம் தெரிவித்து, எழும்பூர் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அலுவலகம் அருகே டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று முதல் மீண்டும் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணி யாளார்கள் சங்கத் தலைவர் பழனி பாரதி கூறியதாவது: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மேலாண்மை இயக்குநர் தலைமையில் குழு அமைத்து பரிந் துரை பெற்று, 4 மாதங்களில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று பேச்சுவார்த் தையில் தெரிவிக்கப்பட்டது, ஆனால், அதுகுறித்து அறிவிக்கவில்லை. விரைவில் குழு அமைத்து இதுகுறித்து பேச் சுவார்த்தை நடத்த வேண்டும்.

இஎஸ்ஐ திட்டத்தை செயல்படுத்த விரைவில் அரசாணை வெளியிடப் படும் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கான அறிவிப்பும் இல்லை. 'காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த இயன்றவரை விரைவாக தனியார் நிறுவனம் நியமிக் கப்படும். இதுவரை இத்திட்டம் செயல் பாட்டுக்கு வராத 8 மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்படும்' என்று கூறப்பட்டது. அது குறித்தும் தெளிவான அறிவிப்புகள் இல்லை. எங்கள் கோரிக்கைகளுக்கான தீர் வுகள் குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT