தமிழகம்

முன்னுரிமைத் துறைகளுக்கு ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு

இடைக்கால பட்ஜெட்டில் தகவல்

செய்திப்பிரிவு

​முன்​னுரிமைத் துறை கடன்​களுக்​காக ரூ.11 லட்​சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது என்று நிதி​யமைச்​சர் தங்கம் தென்னரசு தெரி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் இடைக்​கால பட்​ஜெட்டை தாக்​கல் செய்​து, நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு பேசி​ய​தாவது: ஒரு மாநிலத்​தின் பரவலான வளர்ச்​சிக்கு வலு​வான கடன் பொருளா​தா​ரம் மிக​வும் அவசி​ய​மாகும்.

          

தமி​ழ​கத்​தின் கடன் பொருளா​தா​ர​மானது, மாநில அரசின் வரவு-செலவு திட்ட அளவை போல் ஏறத்​தாழ மூன்று மடங்கு பெரியது என்​ப​தி​லிருந்​து, அதன் அளவு மற்​றும் முக்​கி​யத்​து​வத்தை நாம் அறிய​லாம். வரும் நிதி​யாண்​டில் முன்​னுரிமைத் துறை​களுக்​காக ரூ.11 லட்​சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

மத்​திய அரசின் 16-வது நிதிக்​குழு அண்​மை​யில் அதன் அறிக்​கையை அளித்​துள்​ளது. அதன் மீது எடுக்​கப்​பட்ட நடவடிக்​கை​கள் குறித்த அறிக்​கையை மத்​திய அரசு கடந்த 1-ம் தேதி நாடாளு​மன்​றத்​தில் முன்​வைத்​துள்​ளது. 16-வது நிதிக்​குழு​வின் இந்த அறிக்​கை, தமி​ழ​கத்​துக்கு மிகுந்த ஏமாற்​றத்தை அளித்​துள்​ளது. அனைத்து மாநிலங்​களும், மத்​திய வரி​களின் பகிர்ந்​தளிக்​கத்​தக்க நிதி​யில் மாநிலங்​களுக்​கான பங்கை அதி​கரிக்க வேண்​டுமென தெளி​வாக கோரி​யிருந்த போதி​லும், மாநிலங்​களுக்​கான பங்​கானது 41 சதவீத​மாக தொடர்​வ​தாக நிதிக்​குழு பரிந்​துரைத்​துள்​ளது.

மேலும், மேல்​வரி மற்​றும் கூடு​தல் கட்​ட​ணங்​கள் விதிப்பு அதி​கரித்து கொண்டே செல்​வது குறித்து மாநில அரசுகள் முன்​வைத்த கோரிக்​கை​கள் மீது நிதிக்​குழு​வின் அறிக்​கை​யில் எந்​த​வித​மான பரிந்​துரை​யும் இடம் பெற​வில்லை என்​பது வருந்​தத்​தக்​கது. மாநிலங்​களுக்​கிடையி​லான கிடைமட்ட பகிர்​வில், தமி​ழ​கத்​துக்கு உரிய நியாய​மான பங்கு வழங்​கப்​ப​டா​மல் நிதிக்​குழு பாரபட்​ச​மாக நடந்து கொண்​டுள்​ளது.

ஒன்​ப​தாவது நிதிக்​குழு காலத்​தில், தமி​ழ​கத்​துக்​கான பங்கு 7.931 சதவீத​மாக இருந்த நிலை​யில், தொடர்ந்து வந்த நிதி குழுக்​கள் அதனைக் குறைத்து வந்​தன. இந்த பங்கு 4.079 சதவீத​மாக குறைந்​த​தால் ரூ.3.17 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. இது, தமிழக அரசின் நிலுவை கடனில் சுமார் 33 சதவீதத்​துக்கு சமமான​தாகும். 16-வது நிதிக்​குழு பரிந்​துரைகளில், கேரளா மற்​றும் கர்​நாடகா மாநிலங்​களுக்கு முறையே 23.74 மற்​றும் 13.27 சதவீத அளவில் உயர்வு வழங்​கப்​பட்​டுள்ள நிலை​யில், தமி​ழ​கத்​துக்கு வெறும் 0.44 சதவீதம் என்ற மிகச் சிறிய உயர்வே வழங்​கப்​பட்​டுள்​ளது.இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT