சென்னை: நீர்வளத் துறைச் செயலாளர் பிரசாந்த் எம். வாட்நேரே வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர்ப் பிரிவில், தலைமைப் பொறியாளர் நிலையில் நிரந்தரத் துணைத் தலைவர் பணியிடத்தை நிரப்ப கடந்த அக். 9-ம் தேதி அரசு ஒப்புதல் அளித்தது.
அதன்படி, சென்னை தர மணியில் உள்ள மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதாரத் தகவல் மையத்தின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி வந்த டி. தமிழ்ச் செல்வி, உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சென்னை எழும்பூரில் உள்ள காவிரி தொழில்நுட்பக் குழுமத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.