சென்னை: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘டிட்வா’ புயலில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, ‘ஆபரேஷன் சாகர் பந்து’, அதாவது ‘ஆபரேஷன் கடல் நண்பன்’ என்ற முயற்சியின் மூலம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் இந்தியா உதவிக் கொண்டிருக்கிறது.
இந்திய இதயங்கள், இலங்கை துயரங்களில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை பிரதமர் வலிமையாகவே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று சீமான் போன்றவர்கள் அரசியல் லாபத்துக்காக இன்று அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய அறிக்கைகளும், பொய் உரைகளும் மோடியின் மனிதாபிமானத்தை மறைக்க முடியாது.