தமிழகம்

கோயில்களில் செல்போன்களுக்கு தடை: பக்தர்கள் மீது மறைமுக மன தாக்குதல் என தமிழிசை கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: கோ​யில்​களுக்​குள் செல்​போன் எடுத்​துச் செல்ல தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது, பக்​தர்​கள் மீது தொடுக்​கப்​படும் மறை​முக மனத் தாக்​குதல் என பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் கண்​டனம் தெரி​வித்​து வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இறைவனை தரிசிக்​கச் செல்லும் பக்​தர்​களுக்கு ஏன் இத்​தனை கட்​டுப்​பாடு​கள்? கோயிலுக்​குள் செல்​போன் எடுத்​துச் செல்​லக்​கூ​டாது என்​ப​தற்​காக, அதை வைப்​ப​தற்கே ரூ.5 கட்​ட​ணம் செலுத்த வேண்​டும் என்​பது கண்​டிக்​கத்​தக்​கது.

ஏற்​கெனவே இறைவனை தரிசிக்க வரிசை​யில் நிற்க வேண்​டிய நிலை உள்​ளது. இப்​போது குடும்​பத்​தோடு வரும் பக்தர்கள், தங்​களது செல்​போனை வைப்​ப​தற்​காக​வும் தனி​யாக வரிசை​யில் நிற்க வேண்​டிய சூழ்​நிலை ஏற்​பட்​டுள்​ளது என்​பது மிக​வும் வருந்​தத்​தக்​கது.

தவெக அரசு கோயில்​களிலும் பக்​தர்​களிட​மும் விதித்து வரும் தொடர்ச்​சி​யான கட்​டுப்​பாடு​கள், இந்து மதத்​தை​யும் பக்​தர்​களின் உணர்​வு​களை​யும் பாதிக்​கும் நடவடிக்​கைகளாக​வும் அவர்​கள் மீது தொடுக்​கப்​படும் மறை​முக மன தாக்​குதலாக​வுமே பார்க்​கப்​படு​கிறது.

கோயில் என்​பது பக்​தர்​களுக்கு நிம்​ம​தி​யும் ஆன்​மிக மகிழ்ச்​சி​யும் தரும் இடமாக இருக்க வேண்​டுமே தவிர, கட்​டுப்​பாடு​களும் சிரமங்​களும் நிறைந்த இடமாக மாறி​விடக் கூடாது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT