தமிழகம்

தமிழருவி மணியன் மனைவி காலமானார்

செய்திப்பிரிவு

சென்னை: த​மாகா மூத்த தலை​வர் தமிழருவி மணி​யன் மனைவி பிரேமகு​மாரி உடல்​நலக் குறை​வால் கால​மா​னார். தமிழருவி மணி​யனின் மனைவி பிரேமகு​மாரி (71), உடல்​நலக் குறை​வால், வடபழனி​யில் உள்ள சிம்ஸ் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார்.

இந்​நிலை​யில், பிரேமகு​மாரி நேற்று காலை கால​மா​னார். இதுபற்றி தகவல் அறிந்​ததும், தமிழருவி மணி​யனின் நெருங்​கிய நண்​பரும், இந்​திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) நிறு​வனரு​மான பாரிவேந்​தர், மருத்​து​வ​மனைக்கு சென்று பிரேமகு​மாரி உடலுக்கு அஞ்​சலி செலுத்​தி​னார்.

          

தொடர்ந்​து, பிரேமகு​மாரி உடல் நெற்​குன்​றத்​தில் உள்ள அவரது வீட்​டில் அஞ்​சலிக்​காக வைக்கப்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இன்று காலை அஞ்சலி செலுத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து, அரும்பாக்கம் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

SCROLL FOR NEXT