மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர், ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். படம்: மு.லெட்சுமி அருண்

 
தமிழகம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

மரபை மீறிய செயல் என கட்சித் தலைவர்கள் கண்டனம்

செய்திப்பிரிவு

திருநெல்​வேலி / சென்னை: தமிழ்த்​தாய் வாழ்த்தை இயற்​றிய மனோன்​மணி​யம் சுந்​தரம் பிள்​ளை​யின் பெயரில் செயல்​படும், திருநெல்​வேலி மனோன்​மணி​யம் சுந்​தர​னார் பல்​கலைக்​கழகத்​தின் பட்​டமளிப்பு விழா​வில், தமிழ்த்​தாய் வாழ்த்து 3-வ​தாக பாடப்​பட்​டது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருநெல்​வேலி மனோன்​மணி​யம் சுந்​தர​னார் பல்​கலைக்​கழகத்​தின் 33-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடை​பெற்​றது. மத்​திய உள்​துறை அமைச்​சகம்சமீபத்​தில், அரசு நிகழ்​வு​களில் முதலில் வந்தே மாதரம், தொடர்ந்து தேசிய கீதம், நிறை​வில் தமிழ்த்​தாய் வாழ்த்து பாட வேண்​டும் எனத் தெரி​வித்​திருந்தது.

அதன்​படி, சுந்​தர​னார் பல்​கலைகழக பட்​டமளிப்பு விழா​வில் இதே நடை​முறை பின்​பற்​றப்​படும் என ஆளுநர் மாளி​கை​யும் உறுதி செய்​திருந்​தது. இதற்கு பல்​வேறு அமைப்​பினர், கட்​சி​யினர் எதிர்ப்பு தெரி​வித்​திருந்​தனர்.

இதனால், பட்​டமளிப்பு விழா​வில் பங்​கேற்க ஆளுநர் சென்ற வழிநெடு​கிலும் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டிருந்​தன. பட்​டமளிப்பு விழா தொடங்க இருந்த நிலை​யில், தங்​கப்​ப​தக்​கம் பெறு​வோருக்கு மட்​டுமே ஆளுநர் நேரடி​யாக பட்​டம் வழங்​கு​வார் எனத் தெரிவிக்​கப்​பட்​ட​தால், முனை​வர் பட்டம் பெறு​வோர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். பின்​னர் அனை​வருக்கும் ஆளுநர் நேரடி​யாக பட்டம் வழங்​கு​வார் என்று அறி​விக்கப்பட்ட​து. இதனால்ஒன்​றரை மணி நேரம் தாமத​மாக விழா தொடங்​கியது.

ஏற்​கெனவே அறி​வித்​திருந்​த​படி, முதலில் வந்தே மாதரம், தொடர்ந்து தேசிய கீதம், நிறை​வில் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடப்​பட்​டது. ஆளுநர் அர்​லேகர் 871 மாணவ, மாண​வியருக்கு பட்​டங்​கள் வழங்​கி​னார். தமிழக டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால், மும்பை காவல்​துறை துணை ஆணை​யர் ராதா சுதா,நிலக்​கோட்டை நீதிபதி திரிவேணி ஆகியோர் முனை​வர் பட்​டம் பெறஇருந்​தனர். ஆனால் அவர்​கள் பங்கேற்கவில்லை. அமைச்​சர் விஸ்​வ​நாதன், எம்​.பி., எம்​எல்​ஏக்​களும் பங்​கேற்​கவில்​லை.

இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்​தாய் வாழ்த்து முதலில் பாடப்​ப​டாதது மரபை மீறிய செயல் என பல்​வேறு அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். இதன்படி திமுக துணை பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி,மார்க்​சிஸ்ட் கட்சி மாநிலச் செயலா​ளர் பெ.சண்முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச்செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், விசிக துணை பொதுச்​செய​லா​ளர் வன்​னியரசு, தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT