வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன்.

 
தமிழகம்

கடன் ரூ.13 லட்சம் கோடி: தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கையில் தகவல்

ஒவ்வொரு தனி நபர் மீதும் ரூ.1.28 லட்சம் சுமை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தின் நிதி​நிலை தொடர்​பான வெள்ளை அறிக்​கை​யை, நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் நேற்று வெளி​யிட்​டார். அதில், அரசின் கடன் ரூ.13 லட்​சம் கோடி​யாக உள்​ளது. ஒவ்​வொரு தனி நபர் மீதும் ரூ.1.28 லட்​சம் கடன் சுமை உள்​ளது என்று கூறப்​பட்​டுள்​ளது.

கடந்த 5 ஆண்​டு​கள் திமுக ஆட்​சி​யில் இருந்​தது. சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தனிப்​பெரும் கட்​சி​யாக வெற்றி பெற்​று, மற்ற கட்​சிகளின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​தது. முதல்​வ​ராக ஆட்​சிப் பொறுப்​பேற்ற விஜய், நிதி​நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளி​யிடப்​படும் என்று கூறி​யிருந்​தார். அதன்​படி, வெள்ளை அறிக்​கையை நிதி​யமைச்​சர் மரிய வில்​சன், தலை​மைச் செயல​கத்​தில் நேற்று வெளி​யிட்​டார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: கரோனா பெருந்​தொற்​றுக்​குப் பிந்​தைய 2021-22 முதல் 2025-26 வரையி​லான ஐந்​தாண்டு காலக் கட்​டமே இந்த வெள்ளை அறிக்​கை​யின் மையப் பகுப்​பாய்​வுக் கால​மாகும். கரோனா பெருந்​தொற்​றுக்​குப் பிந்​தைய மீட்​சிக் காலத்​தில் கர்​நாட​கா, மகா​ராஷ்டிரா போன்ற மாநிலங்​கள் தங்​களின் நிதி நிலை​யைச் சீரமைத்​துள்ள நிலை​யில், தமிழகத்​தின் வளர்ச்சி குறி​யீடு​கள் எதிர் திசை​யிலேயே நகர்ந்​துள்​ளன.

தமிழகத்தில் ரூ.46,538 கோடி​யாக இருந்த வரு​வாய் பற்​றாக்​குறை கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.78,324 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. இது கரோனா பெருந்​தொற்று ஆண்டை விட​வும் வரலாறு காணாத உச்​சத்தை அடைந்​துள்​ளது. மாநில சொத்து வரி வரு​வாய் கடும் வீழ்ச்​சி​யைச் சந்​தித்​துள்​ளது. தற்போதைய நுகர்​வுச் செல​வு​களை ஈடு​கட்டவேமாநிலம் கடன் பெற்​றுள்​ளது என்​பதை இது காட்​டு​கிறது. அதன்​படி, தமிழகத்​தின் நிலு​வை​யில் உள்ள கடன் பொறுப்​பு​கள், 2021 ஏப்​.1-ம் தேதி முதல் 2026 மார்ச் 31-ம் தேதி வரை கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.5.13 லட்​சம் கோடி​யில் இருந்து ரூ.10 லட்​சம் கோடி​யாக உயர்ந்​துள்​ளது. அந்த வகை​யில், தனிநபர் கடன் சுமை ரூ.1,28,934 ஆக உயர்ந்​துள்​ளது. இது மற்ற மாநிலங்​களை விட அதி​கம்.

அதே​போல், ஆண்டு வட்​டிச் சுமை​யானது 2021-22-ம் ஆண்​டில் ரூ.41,564 கோடி​யாக இருந்த நிலை​யில், 2025-26-ல் ரூ.67,050 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. தற்​போது, மொத்த வரு​வாய் வரவு​களில் சுமார் 22.8 சதவீத​மும், மாநிலத்​தின் சொந்த வரி வரு​வா​யில் 34.8 சதவீதத்​துக்கு மேல் வட்டி செலுத்​து​வதற்கே செல்​கிறது. மாநிலத்​தின் நிதி நெருக்​கடிக்கு முக்​கியக் காரண​மாக வட்​டியே உள்​ளது. மேலும், ஜிஎஸ்​டி, பெட்​ரோலிய வரிமற்​றும் மது​பான வரி போன்​றவற்​றில் முறை​யான மேலாண்மை இல்​லாத​தால் ஆண்​டுக்​கு ரூ.51,000 கோடி வரு​வாய் இழப்பு ஏற்​படு​கிறது. புதிய திட்​டங்​களுக்கு மூலதனச் செலவு வெறும் 11.8 சதவீதம் மட்​டுமே உள்​ளது.

மின்துறை நிறு​வனங்​களின் கடன் மட்​டும் ரூ.2.47 லட்​சம் கோடி​யாக உள்​ளது. போக்​கு​வரத்​துத் துறை​யில் ஒரு கி.மீ. செலவு ரூ.78.81 ஆகவும், வரு​வாய் ரூ.25.97 ஆகவும் உள்​ளது. அதன்​படி, போக்​கு​வரத்து துறை​யில் ரூ.72,667 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. இவற்றையும் சேர்த்​துக் கணக்​கிடும் போது, மொத்த நிதிச்​சுமை ரூ.13.18 லட்​சம் கோடியை எட்​டு​கிறது. கடந்த 2021 - 2026 ஆண்டு காலக் கட்​டத்​தில் ரூ.4.87 லட்​சம் கோடி கடன் பெறப்​பட்​டிருந்​தது. இந்த 5 ஆண்டு கால கடன், மாநிலம் தனது முதல் 60 ஆண்டு காலத்​தில் பெற்ற கடனை விட அதி​க​மாகும். 2025-26-ம் ஆண்​டின் முதல் நிலை கணக்​கு​களின்​படி நிதிப் பற்​றாக்​குறை ரூ.1,33,208 கோடி​யாக​வும், மாநில மொத்த உள்​நாட்டு உற்​பத்தி 3.77 சதவீத​மாக​வும் உயர்ந்​துள்​ளது. இது இது​வரை பதி​வானவற்​றில், மிக உயர்ந்த நிதிப் பற்​றாக்​குறை​யாகும்.

இந்த இக்​கட்​டான சூழலில் இருந்து மீள, வரு​வாய் திரட்​டு​வதை அதி​கரித்​தல், செல​வினங்​களை முறைப்​படுத்​துதல், பொதுத்​துறை நிறு​வனங்​களில் சீர்​திருத்​தம் மற்​றும் ஊழலற்ற நிர்​வாகம்​ அவசி​யம்​ என்​று வெள்​ளை அறிக்​கை பரிந்​துரைக்​கிறது. இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT