ஆனைமங்கலம் செப்பேடுகள்.

 
தமிழகம்

ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை தமிழகம் கொண்டு வர வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை கடிதம்

செய்திப்பிரிவு

சென்னை: நெதர்​லாந்​தில் இருந்து அண்​மை​யில் மீட்​கப்​பட்ட 11-ம் நூற்​றாண்டு சோழர் கால ‘ஆனைமங்​கலம் செப்​புப் பட்​ட​யங்​களை’ உடனடி​யாகத் தமிழகத்​துக்​குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க முதல்​வர் விஜய்க்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்​பாக தமிழ்​நாடு வரலாற்​றுப் பேர​வை​யின் பொதுச் செய​லா​ளர் பேராசிரியர் எஸ்​.எஸ்​.சுந்​தரம் அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் கூறப்​பட்​டுள்​ள​தாவது:

கடந்த மே 16-ம் தேதி நெதர்​லாந்​தின் தி ஹேக் நகரில் நடை​பெற்ற விழா​வில், 11-ம் நூற்​றாண்​டைச் சேர்ந்த ஆனைமங்​கலம் செப்​புப் பட்​ட​யங்​கள் இந்​திய அரசிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன. உலகப் புகழ்​பெற்ற இந்த வரலாற்று ஆவணங்​களை மீட்​டெடுத்த மத்​திய அரசின் முயற்​சிக்கு தமிழ்​நாடு வரலாற்​றுப் பேரவை நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறது. அதேசம​யம், மீட்​கப்​பட்ட அந்​தப் பட்​ட​யங்​கள் இன்​னும் அவற்​றின் சொந்த மண்​ணான தமிழகத்​துக்கு வந்து சேர​வில்லை என்​பது வருத்​தமளிக்​கிறது.

ராஜேந்​திர சோழனின் அரச முத்​திரை​யுடன் கூடிய 21 பெரிய மற்​றும் 3 சிறிய செப்பு ஏடு​களைக் கொண்ட இந்த ஆனைமங்​கலம் பட்​ட​யங்​கள், உலக வரலாற்​றில் மிக முக்​கிய​மான ஆவண​மாகக் கருதப்​படு​கின்​றன. தற்​போது இந்​தப் பட்​ட​யங்​கள் டெல்​லி​யில் உள்ள மத்​திய சேமிப்​பகத்​தில் வைக்​கப்​படலாம் என்ற தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதற்கு வரலாற்று ஆய்​வாளர்​கள் மற்​றும் பொது​மக்​கள் மத்​தி​யில் பலத்த எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது. தமிழகத்​தின் கலாச்​சார அடை​யாள​மான இந்​தப் பட்​ட​யங்​கள், அவற்​றுக்​குச் சொந்​த​மான தமிழ் மண்​ணிலேயே காட்​சிப்​படுத்​தப்பட வேண்​டும். குறிப்​பாக கங்​கை​கொண்ட சோழபுரம் அல்​லது நாகப்​பட்​டினம் அருங்​காட்​சி​யகத்​தில் இவற்றை வைக்க வேண்​டும் என்று கோரிக்கை வைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் 49-வது பிரி​வின்​படி, வரலாற்​றுச் சின்​னங்​களைப் பாது​காப்​பது மாநில அரசின் கடமை​யாகும். எனவே ஆனைமங்​கலம் பட்​ட​யங்​களை​யும் தமிழகத்​திடம் ஒப்​படைக்க வேண்​டும். மத்​திய அரசு மற்​றும் இந்​தி​யத் தொல்​லியல் துறை​யிடம் பேசி, பட்​ட​யங்​களை நிரந்​தர​மாகத் தமிழகத்​திடம் ஒப்​படைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இந்​தப் பட்​ட​யங்​களை மீட்​பது தொடர்​பாகத் தமிழ்​நாடு சட்​டப்​பேர​வை​யில் ஒரு​மன​தாகத் தீர்​மானம் நிறைவேற்ற வேண்​டும். தேவைப்​பட்​டால், உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​தாவது தமிழகத்​தின் உரிமையை நிலை​நாட்ட வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT