சந்தீப் ராய் ரத்தோர்

 
தமிழகம்

தமிழக சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம்

வெற்றி மயிலோன்

சென்னை: தமிழக சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய சிறைத் துறை டிஜிபியாக சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடி, பின்னர் அனைவரும் பிடிபட்ட நிலையில், தமிழக சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, புதிய சிறைத் துறை டிஜிபியாக சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது சந்தீப் ராய் ரத்தோர் மின்வாரிய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்ட சிறையில் இருந்து கடந்த 26-ம் தேதி இரவு அங்கிருந்த போலீஸாரை தாக்கி 17 பேர் தப்பியோடினர். தேனியில் இருந்து தப்பிய 17 கைதிகளும் 36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு பிடிபட்டனர்.

அதேபோல புழல் சிறையில் இருந்தும் சில நாட்களுக்கு முன்பு இரு கைதிகள் தப்பியோடினர். இந்த இரு சம்பவங்களையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனையடுத்து, தற்போது சிறைத் துறை டிஜிபி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT