தமிழகம்

தமிழகத்தின் மின் கட்டமைப்பை வலுப்படுத்த 231 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் விஜய் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தின் மின் கட்​டமைப்பை வலுப்​படுத்த ரூ.15,032 கோடி​யில் 231 புதிய துணை மின் நிலை​யங்​கள் அமைக்க முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார்.

சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று எரிசக்​தித் துறை சார்ந்த ஆய்​வுக் கூட்ட முதல்​வர் விஜய் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இந்த ஆய்​வுக்​கூட்​டத்​தில் தமிழ்​நாடு மின்​சார வாரிய துணை நிறு​வனங்​களு​டன் மின் உற்​பத்தி, மின் தேவை, மின் விநி​யோகம் மற்​றும் மின் கட்​டமைப்பை வலுப்​படுத்த மேற்​கொள்​ளப்​பட்​டு​வரும் மேம்​பாட்​டுப் பணி​கள் குறித்து ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது.

தமிழகம் முழு​வதும் மின் உற்​பத்தி மற்​றும் மின் கொள்​முதல் போது​மான அளவில் இருப்​ப​தால், மாநிலத்​தில் மின்​சார பற்​றாக்​குறை எது​வும் இல்​லை.

இருப்​பினும், சென்னை உள்​ளிட்ட நகர்ப்​புறங்​களின் சில இடங்​களில் உள்ள பழமை​யான மின் உபகரணங்​கள், நிலத்​தடி மின் கேபிள் பழுதுகள், அதி​கரித்​துள்ள மின் பயன்​பாடு, பராமரிப்​புப் பணி​கள், பல்​வேறு சேவைத் துறை​கள் சாலை தோண்​டும் பணி​களின்​போது எதிர்​பா​ராத​வித​மாக மின்​கேபிள்​கள் சேதமடைவது போன்ற காரணங்​களி​னால் பகிர்​மான அளவில் அவ்​வப்​போது மின்​தடைகள் ஏற்​படு​கின்​றன.

இந்த பிரச்​சனை​களுக்கு நிரந்​தரத் தீர்வு காண, சென்னை மாநகரப் பகு​தி​யில் மட்​டும் ரூ.2,275 கோடி மதிப்​பில் மின் விநி​யோக கட்​டமைப்பை மேம்​படுத்​தும் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்பட உள்​ளன. மாநிலம் முழு​வதும் 121 புதிய மற்​றும் மேம்​படுத்​தப்​பட்ட துணை மின் நிலை​யங்​கள் ரூ.10,109 கோடி செல​வில் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. மேலும் 231 புதிய துணை மின் நிலை​யங்​கள் ரூ.15,032 கோடி மதிப்​பீட்​டில் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளன.

இக்​கூட்​டத்​தில், முதல்​வர் விஜய் மின் பழுது காரண​மாக பெறப்​படும் புகார்​களுக்கு உடனுக்​குடன் நடவடிக்கை எடுத்து சரி செய்ய அறி​வுறுத்​தி​னார். மேலும், மின் பழுதுகளைச் சரிசெய்​திடத் தேவை​யான 15,058 மின் பணி​யாளர்​களை முறைப்​படி நியமிக்​க​வும், மின் தளவாடப் பொருட்​களை உடனடி​யாக கொள்​முதல் செய்​ய​வும், மின் பணி​யாளர்​களை ரோந்​துப் பணி​யில் ஈடு​படுத்​த​வும் ஆணை​யிட்​டார்.

சென்​னையைப் பொறுத்​தவரை ஏற்​கெ​னவே உள்ள 125 ரோந்து குழுக்​களை சுற்​றுப்​பணி​யில் ஈடு​படுத்​த​வும், அக்​குழு​வினர் அவசரப் பணி​களுக்​காக புகார் பெறப்​படும் இடங்​களுக்​குச் சென்று புகார் மீது உடனடி​யாக நடவடிக்கை மேற்​கொண்​டு, பழுதை சரி செய்​திட​வும், பொது​மக்​களுக்கு தடையற்ற மின்​சா​ரம் வழங்க மின்​சார வாரி​யம் மற்​றும் அதன் நிறு​வனங்​கள் சீரிய முறை​யில் செய​லாற்ற வேண்​டுமென முதல்​வர் அறி​வுறுத்​தி​னார்.

இக்​கூட்​டத்​தில், எரிசக்தி மற்​றும் சட்​டத்​துறை அமைச்​சர் சி.டி.ஆர். நிர்​மல்​கு​மார், தலை​மைச் செயலர் மு. சாய்​கு​மார், மின் வாரிய தலை​வர் ஜெ. ராதா​திருஷ்ணன், நிதித்​துறை செயலர் மு.அ. சித்​திக், எரிசக்​தித் துறை செயலர் அனில் மேஷ்​ராம், தமிழ்​நாடு மின் உற்​பத்​திக்கழக மேலாண்மை இயக்​குநர் ம.கோ​விந்தராவ், பசுமை எரிசக்​திக் கழக மேலாண்மை இயக்​குநர் பி.என்.ஸ்ரீதர் மற்​றும் அரசு உயர்​ அலு​வலர்​கள்​ கலந்​து ​கொண்​டனர்​.

SCROLL FOR NEXT