கனிமொழி எம்.பி

 
தமிழகம்

“மேகேதாட்டு திட்டத்தை தமிழக காங்கிரஸ் தலையிட்டு தடுத்து நிறுத்தும்” - கனிமொழி நம்பிக்கை

வெற்றி மயிலோன்

சென்னை: “தவெகவின் அமைச்சரவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் பங்குகொண்டிருக்கும் நிலையில், காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலையிட்டு உடனடியாக மேகேதாட்டு திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் என நம்புகிறேன்” என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மேற்கு மண்டலத்தில் தொடங்கி தஞ்சை டெல்டா வரை தமிழ்நாட்டில் பாதியை பாலைவனமாக்கத் துடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் திட்டத்தை, திமுக ஆட்சியிலிருந்த வரை தடுத்து நிறுத்தியது.

தற்போது, தவெகவின் அமைச்சரவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் பங்குகொண்டிருக்கும் நிலையில், காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலையிட்டு உடனடியாக அத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

காவிரி நடுமன்ற தீர்ப்பிற்கு எதிராக கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் 24.05.2026 (நேற்று) தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையில், “காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலையிட்டு உடனடியாக மேகேதாட்டு திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் என நம்புகிறேன்” என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT