முதல்வர் ஸ்டாலின்

 
தமிழகம்

“மாநில உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்போம்” - முதல்வர் ஸ்டாலின்

தமிழினி

சென்னை: அரசியலமைப்பு தினத்தையொட்டி,'மாநில உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்போம்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்துக்கு சொந்தமானது அல்ல. அது அனைத்து மக்களுக்கும் சொந்தமானது.

இந்த அரசியலமைப்பு தினத்தில், பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் ஒவ்வொரு சக்தியையும் எதிர்க்கும் நமது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி உண்மையான கூட்டாட்சியை நிலைநிறுத்தவும், ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளையும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் செய்வோம்.

நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை பாதுகாப்பதே அரசமைப்புக்கு நாம் செலுத்தும் அஞ்சலி” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT