தமிழகம்

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்

நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

செய்திப்பிரிவு

நெல்லை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

இது குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சி கவிழும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அறியாமையில் பேசி வருகிறார். உண்மை நிலை அவருக்கு இன்னும் தெரியவில்லை. அதனால்தான் அவர் அப்படி பேசுகிறார். மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு மரியாதை கொடுப்பது மாதிரி அவர் தெரியவில்லை. திமுக தலைமைக்கும் இது தெரியவில்லை. மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு முதலில் தலைவணங்க வேண்டும்.

தமிழக முதல்வர் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையை 100 சதவீதம் மக்கள் வரவேற்கின்றனர்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT