தமிழகம்

ஆக்கிரமிப்புகளை அகற்றும் வழக்கில் தாம்பரம், விருத்தாசலம் வட்டாட்சியர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம்

செய்திப்பிரிவு

சென்னை: தாம்​பரம் தாலு​கா​வில் உள்ள கோவி​லாஞ்​சேரி கிராமத்​தில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை 12 வாரங்​களில் அகற்ற வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் கடந்​தாண்டு ஜூலை​யில் உத்​தர​விட்​டிருந்​தது.

இந்​நிலை​யில் உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி அதி​காரி​கள் ஆக்​கிரமிப்​பு​களை அகற்​ற​வில்லை எனக்​கூறி திருநின்​றவூரைச் சேர்ந்த சி.சதீஷ் என்​பவர், சிஎம்​டிஏ உறுப்​பினர் செயல​ரான ஜி.பிர​காஷ், செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​ய​ராகப் பணிபுரிந்த டி.சினே​கா, பரங்​கிமலை பஞ்​சா​யத்து யூனியன் வட்​டார வளர்ச்சி அலு​வலர் வெங்​கட்​ராகவன், தாம்​பரம் தாலுகா வட்​டாட்​சி​யர் ராஜேந்​திரன் உள்​ளிட்​டோருக்கு எதி​ராக உயர் நீதி​மன்​றத்​தில் நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

          

இந்த வழக்கு நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், எம்​.ஜோ​தி​ராமன், அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது எதிர்​மனு​தா​ரர்​கள் தரப்​பில் ஆஜரான கூடு​தல் தலைமை வழக்​கறிஞர்​கள் ஜெ.ர​வீந்​திரன், ஆர்​.ரமன்​லால் ஆகியோர், “கோவி​லாஞ்​சேரி கிராமத்​தில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி அகற்ற வரு​வாய்த் துறை மற்​றும் ஊரக வளர்ச்​சித்​துறை அதி​காரி​கள் உரிய நடவடிக்கை எடுத்து வரு​கின்​றனர்” என வாதிட்​டனர்.

அதையேற்க மறுத்த நீதிப​தி​கள், “ஆக்​கிரமிப்​பு​களை 12 வார காலத்​துக்​குள் அகற்ற வேண்​டுமென உயர் நீதி​மன்​றம் ஒரு காலக்​கெடுவை நிர்​ண​யித்​தால் அந்த உத்​தரவை அமல்​படுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும். இல்​லை​யென்​றால் அந்த உத்​தரவை எதிர்த்து மேல்​முறை​யீடோ அல்​லது மறுஆய்வு மனுவோ தாக்​கல் செய்ய வேண்​டும்.

ஆனால் எது​வுமே செய்​யாமல் உயர் நீதி​மன்ற உத்​தரவை மதிக்​காமல் செயல்​படும் அதி​காரி​களின் செயல்​பாடு கண்​டிக்​கத்​தக்​கது. மக்​களின் வரிப்​பணத்​தில் சம்​பளம் பெறும் அதி​காரி​கள் தங்​களது பொறுப்பை வெறுமனே தட்​டிக் கழிக்​கக்​கூ​டாது” என அறி​வுறுத்​தினர்.

மேலும், “இந்த வழக்​கில் சிஎம்​டிஏ உறுப்​பினர் செயலர், செங்​கல்​பட்டு ஆட்​சி​யரை விடுவிக்​கிறோம். தாம்​பரம் வட்​டாட்​சி​யர் மற்​றும் பரங்​கிமலை வட்​டார வளர்ச்சி அலு​வலர் ஆகிய இரு​வருக்​கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்​கிறோம். அவர்​கள் 4 வார காலத்​துக்​குள் இந்த தொகையை மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு​விடம் செலுத்த வேண்​டும்” என உத்​தர​விட்​டுள்​ளனர்.

இதே​போல, கடலூர் மாவட்​டம் விருத்​தாசலம் தாலு​கா​வில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை அதி​காரி​கள் அமல்​படுத்​த​வில்லை எனக்​கூறி கடலூர் மாவட்ட ஆட்​சி​யர் சிபி ஆதித்ய செந்​தில்​கு​மார், விருத்​தாசலம் வட்​டாட்​சி​யர் அரவிந்​தன் உள்​ளிட்​டோருக்கு எதி​ராக வழக்கு தொடரப்​பட்​டது.

அந்த வழக்​கை​யும் விசா​ரித்த நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், எம்​.ஜோ​தி​ராமன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, விருத்​தாசலம் வட்​டாட்​சி​யர் அரவிந்​தனுக்​கும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தர​விட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT