சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து நேற்று பரப்புரை மேற்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா.

 
தமிழகம்

தமிழகம் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆட்சியே காரணம்: டி.ராஜா கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் தற்​போது பெற்​றுள்ள வளர்ச்​சிக்கு முதல்​வர் மு.க.ஸ்டாலின் ஆட்​சியே காரணம் என்று இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா தெரி​வித்​தார்.

சென்​னை​யில் திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து டி.​ராஜா நேற்று பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். சைதாபேட்​டை​யில் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், கொளத்​தூரில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்​தார்.

          

சைதாப்​பேட்​டை​ பொதுக்​கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: சமத்​து​வம், சமூக நீதிக் கொள்​கையை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டிய தீவிர​மான போராட்​டத்​தில் பாஜக மற்​றும் அதனுடன் சேர்ந்​திருப்​பவர்​களை வீழ்த்த நடை​பெறும் தேர்​தல் இது.

இந்​தியா மதச்சார்​பற்ற நாடாக இருக்க வேண்​டும் என கூறிய​வர் அம்​பேத்​கர், ஆனால், தற்​போது பாஜக​வின் செயல்​பாடு​கள் என்ன என்​பது அனைவருக்​கும் தெரி​யும்.

பிரதமர் மோடி, அமைச்​சர் பியூஷ் கோயல் ஆகியோர் தமிழகம் பின் தங்​கி​யுள்​ள​தாக கூறுகின்​றனர். இதுபற்றி கோயல் என்​னுடன் விவா​திக்​கத் தயா​ரா, எதில் தமிழகம் பின் தங்​கி​யுள்​ளது, கல்​வி, மருத்​து​வம், வாழ்க்கை தரம் என அனைத்​தி​லும் முதன்மை மாநில​மாக தமிழகம் உள்​ளது.

மத்​தி​யில் இருக்​கும் ஆட்சி எல்​லாருக்​கு​மான ஆட்சி என்று சொல்​லிக் கொள்​கின்​றனர். ஆனால், விவ​சா​யிகள், ஏழைகளுக்கு எதி​ரான ஆட்​சி​யாக அது உள்​ளது.

அவர்​களு​டன் அதி​முக இங்கே அணி சேர்ந்து ஆதா​ரம் இல்​லாத அவதூறுகளை பரப்பி வரு​கிறது. பழனி​சாமி, தமிழகத்​தின் கலாச்​சா​ரம், உயர் மதிப்​பு​களை பாஜக​வின் காலடி​யில் போட்டு வணங்கி வரு​கிறார்.

தமிழகம் தற்​போது பெற்​றுள்ள வளர்ச்​சிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஆட்​சியே காரணம். மாநிலங்​களின் நிதியை கொடுக்க மத்​திய அரசு மறுக்​கிறது, தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்​தியை திணிப்​பது போன்​றவற்றை செய்து வரு​கிறது. மத்​தி​யில் விரை​வில் பாஜக ஆட்சி அகற்​றப்பட வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT