சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், நிகழ்ச்சியின் கையேட்டை வெளியிட்டார். உடன் சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி உள்ளிட்டோர்.

 
தமிழகம்

சவால்களை எதிர்கொள்ள இயற்கை விவசாயத்துக்கு நாம் மாற வேண்டும்: ஆளுநர் அர்லேகர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘தற்போதைய காலச்சூழலில் பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள இயற்கை விவசாயத்துக்கு நாம் மாற வேண்டும்’ என ஆளுநர் அர்லேகர் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் ‘கூட்டு மற்றும் நிலையான முன்னெடுப்புகள் மூலம் பாரதத்தின் மறுமலர்ச்சி’ என்ற தலைப்பிலான சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்ற ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பேசியதாவது: தற்போதைய சூழலில் மண்வளச் சீரழிவு, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை நமக்கு முன்னால் உள்ள பெரும் சவால் களாக உருவெடுத்துள்ளன. இவற்றை எதிர்கொள்ள இயற்கை விவசாயம், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை நோக்கி நாம் உடனே மாற வேண்டியது அவசியமாகும்.

மண்வளம் மீட்டெடுப்பு: விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தவும், பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதி செய்யவும், நீண்டகால அடிப்படையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் ரசாயனமற்ற விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். மேலும், அழிந்துவரும் மண் வளத்தை மீட்டெடுப்பதும் மிகவும் முக்கியமாகும்.

அதேபோல், தற்சார்புடைய மற்றும் எத்தகைய சவால்களையும் தாங்கிக் கொள்ளக்கூடிய ஒரு வலுவான விவசாயக் கட்டமைப்பை உருவாக்க அரசு இயந்திரம், நிறுவனங்கள் மற்றும் சமூகம் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வளமான மண்ணே ஆரோக்கியமான குடிமக்களையும், ஒரு வலிமையான தேசத்தையும் உருவாக் கும்.இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT