தமிழகம்

திருப்​பரங்​குன்​றம் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்​பும்

செய்திப்பிரிவு

திருப்​பரங்​குன்​றம் விவகாரத்​தில் உச்ச நீதி​மன்ற தீர்ப்​புக்கு எதிராக தமிழக அரசு எடுத்த முடிவுக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் தங்​களது ஆதரவையும், எதிர்ப்​பையும் தெரி​வித்​துள்​ளனர்.

ஆதரவு | விசிக தலை​வர் திரு​மாவளவன்: திருப்​பரங்​குன்​றத்​தில் வழக்​கம்​போல உச்​சிப்​ பிள்​ளை​யார் கோயில் அருகே உள்ள தீபமண்​டபத்​தில் தீபத்தை ஏற்​றியுள்ள மதுரை மாவட்ட ஆட்​சி​யருக்​கும், அதி​காரி​களுக்​கும் பாராட்​டுகள். சதி​ முயற்​சியை முறியடித்து சமூகநல்​லிணக்​கத்தை பாது​காத்​துள்ள முதல்​வர் விஜய்க்​கும் பாராட்​டுகள். தமிழர் மரபையும் சமூகநல்​லிணக்​கத்​தையும் பாது​காப்​ப​தில் உறுதி​யோடு செய​லாற்​றியுள்ள தவெக அரசுக்கு பாராட்​டுகள்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: திருப்​பரங்​குன்​றம் உச்​சிப்​பிள்​ளை​யார் கோயில் அரு​கில் உள்ள கல்​தூண் மண்​டபத்​தில் கார்த்​திகை தீபம் இந்த ஆண்​டும் வழக்​கம்​போல் ஏற்​றப்​பட்​டது வரவேற்​கத்​தக்​கது. பல்​வேறு முனைகளி​லிருந்து கொடுக்​கப்​பட்ட கடும் அழுத்​தங்​களுக்கு அடிபணி​யாமல் தவெக அரசு எடுத்த உறுதி​யான நட​வடிக்கை பாராட்​டுக்​குரியது.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீபம் ஏற்​றும் விவகாரத்​தில், உச்ச நீதி​மன்​றத்​தின் இடைக்​கால உத்​தர​வால் சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினையும், பதற்​றமான சூழலும் ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், மதநல்​லிணக்​கத்​தையும், மதச்​சார்​பின்​மையையும், மக்​கள் ஒற்​றுமையையும் பாது​காக்க அனைத்து நட​வடிக்​கைகளை​யும் தமிழக அரசு மேற்​கொண்டு வரு​வதை இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி வரவேற்​கிறது.

மமக தலை​வர் ஜவாஹிருல்லா: தமிழக அரசு எந்த அழுத்​தத்​துக்​கும் அடிபணி​யாமல், பாரம்​பரிய நடைமுறையை நிலைநாட்​டி​யிருப்​பது வரவேற்​கத்​தக்​கது. மத உணர்​வு​களைத் தூண்டி சமூகத்​தில் பதற்​றத்தை உரு​வாக்​கும் முயற்​சிகளுக்கு இடமளிக்​காமல், நீண்​டகாலமாக பின்​பற்​றப்​பட்டு வரும் மரபை மதித்து அரசு எடுத்​துள்ள இந்த நிலைப்​பாடு பாராட்​டுக்​குரியது.

மஜக தலை​வர் மு.தமிமுன் அன்​சாரி: பல நெருக்​கடிகள் இருந்த நிலை​யிலும், தமிழக மக்​களு​டைய மன உணர்​வு​களை புரிந்து கொண்டு, பக்​தர்​களின் பாரம்​பரிய பண்​பாட்டை காப்​பாற்​றியதற்கு தமிழக அரசுக்​கும், முதல்​வர் விஜய்க்​கும் பாராட்​டுகள். திமுகவை போல் தவெக அரசும் இந்த நிலைப்​பாட்​டில் உறுதி​யாக இருந்​தது வரவேற்​கத்​தக்​கது.

எதிர்ப்பு | அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி: உச்ச நீதி​மன்​றம் வழங்​கும் தீர்ப்பை எந்த அரசாங்​க​மாக இருந்​தா​லும் நடைமுறைப்​படுத்த வேண்​டியது கட்​டாய​மான கடமையாகும். உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தரவை மதிக்​காமல் செயல்​பட்​டால், அரசுக்கு எதிராக நீதி​மன்ற அவ​மதிப்பு நட​வடிக்கை எடுக்​கப்​பட வாய்ப்​புள்​ளது. உச்ச நீதி​மன்​றமே, நாட்​டின் உச்​சபட்ச அதி​காரம் கொண்ட நீதித்​துறை அமைப்பு என்​ப​தால், அதன் உத்​தரவு​களை அரசு முறை​யாக நடைமுறைப்​படுத்த வேண்​டும். தவறினால் நீதி​மன்​றம் உரிய நட​வடிக்கை எடுக்​கும்.

தமிழக பாஜக தலை​வர் நயினார் நாகேந்​திரன்: சிறுபான்மையினரின் செல்​லப்​பிள்​ளை​யாக இருக்க வேண்​டும் என்ற நோக்​கில், இடைத்​தேர்​தலில் இஸ்லாமிய சமூகத்​தினரின் மொத்த வாக்​கு​களை​யும் வாரிச்​சுருட்​டிக் கொள்​ளவே உச்ச நீதி​மன்ற தீர்ப்பை அவ​மதித்து, தெரிந்தே மாபெரும் வரலாற்றுப் பிழையை செய்​து​விட்​டார் முதல்​வர் விஜய். உச்​சநீதி​மன்​றத்தை உதாசீனப்​படுத்​திய தவெக அரசுக்கு, அழிவுக்​கான ‘கவுன்ட்​ட​வுன்’ தொடங்​கி​விட்​டது. முதல்​வர் விஜயையும், அவரது இந்து விரோத அரசையும் சட்​டம் ஒருபோதும் மன்​னிக்​கப் போவதில்லை. அதி​கார ஆணவத்​தில் மிதக்​கும் தவெக அரசுக்கு முருகப்​பெரு​மான் தக்க பாடத்தை புகட்​டுவார்.

வீ த லீடர்ஸ் தலை​வர் அண்​ணா​மலை: நீதி​மன்​றங்​கள் ஜனநாயகத்​தின் தூண்​கள். நீதி​மன்ற தீர்ப்​பு​களை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்​புக்கு உட்​படுத்​தாமல், அதை நேர்​மையாக செயல்​படுத்​தும் போது​தான் அங்கே நீதி​யெனும் சமநிலை நில​வும். திருப்​பரங்​குன்​றம் தீபத்​தூண் விவகாரத்​தில் நீதி​மன்ற தீர்ப்​பு​களை துச்​ச​மாக நினைத்து தான்​தோன்​றித்​தனமாக நடந்​து​கொண்​டுள்​ளது தவெக அரசு. நிச்​சய​மாக, இதன் விளைவு​கள் எவ்​வளவு விபரீத​மானது என்​பது ஆளும் அரசுக்கு புரிய​வில்லை. என்ன காரணம் கூறினாலும் தவெக அரசாங்​கம் அழிக்​கவே முடி​யாத வரலாற்​றுப் பிழையை நிகழ்த்​தி​விட்​டது.

இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்வரா சி.சுப்பிரமணி​யம்: திருப்​பரங்​குன்​றம் தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று நீதி​மன்​றம் அறி​வித்​தும் தீபம் ஏற்​றாமல் தவெக அரசு மிகப்​பெரிய வரலாற்​றுப் பிழையும், மோசடியும் செய்​துள்​ளது. இந்த அரசுக்கு ஆலோ​சனை சொல்​லக்​கூடிய நபர்​கள் நக்​சலைட், கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்​தவர்​கள். இந்த அரசு நீடிப்​ப​தற்​கான வாய்ப்பு குறைவு. முருகன் நிச்​சய​மாக பாடம் கற்​றுக் கொடுப்​பார். இந்த நட​வடிக்​கைக்கு உடந்​தையாக இருந்த அதி​காரி​களுக்கு நீதி​மன்​றம் தண்​டனை வழங்​கும். கடந்த திமுக ஆட்​சி​யில் 2 அதி​காரி​கள் மன்​னிப்பு கேட்​கக்​கூடிய சூழ்​நிலையை உரு​வாக்​கியது. அந்த நீதிபதி சாதா​ரண​மாக மன்​னித்து விட்டு விட்​டார். ஆனால், நிச்​சய​மாக உச்ச நீதி​மன்​றம் இந்த அரசுக்​கும், அதி​காரி​களுக்​கும் மிகப்​பெரிய தண்​டனை வழங்கும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT