தமிழகம்

பாகிஸ்தான் தலையீட்டால் போர் நிறுத்தம்: திமுக எம்.பி. சல்மாவின் பதிவால் திடீர் சர்ச்சை

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிய பாஜக வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ஈ​ரான் மீதான அமெரிக்​கா​வின் போர் நடவடிக்​கையை பாகிஸ்​தான் தடுத்து நிறுத்​தி​ய​தாக, திமுக மாநிலங்​களவை உறுப்​பினர் சல்மா எக்ஸ் தளப் பக்​கத்​தில் பதி​விட்​டது அரசி​யல் வட்​டாரத்​தில் பெரும் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்​துக்​கும் மேலாக நீடித்து வந்த போர் பதற்​றம், தற்போது இரண்டு வாரத்​துக்கு நிறுத்தி வைக்​கப்​படு​வ​தாக அமெரிக்கா அறி​வித்​துள்​ளது.

          

இந்​தச் சூழலில், திமுக எம்​.பி.சல்மா தனது எக்ஸ் தளத்​தில், “பாகிஸ்​தானின் தலை​யீட்​டால் போர் நின்​றிருக்​கிறது. விஸ்​வகுரு பாவம்.. சங்​கி​கள் எப்​படி ஜீரணிக்​கப்​போகிறீர்​கள்?” என்று பதி​விட்​டிருந்​தார்.

பாகிஸ்தானைப் புகழ்ந்​தும், பிரதமர் மோடியை விமர்​சித்​தும் அவர் பதி​விட்ட இந்​தக் கருத்து தேசிய அளவில் விவாத​மானது.

சல்​மா​வின் இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத், “சிறு​பான்மை வாக்கு வங்​கிக்​காக சல்மா கீழ்த்​தர​மான அரசி​யலில் ஈடு​படு​கிறார்.

உக்​ரைன் - ரஷ்யா போர் உள்​ளிட்ட சர்​வ​தேச நெருக்​கடிகளைத் தீர்க்க உலக நாடு​களால் ‘விஸ்​வகுரு’​வாக ஏற்​றுக்​கொள்​ளப்​பட்​ட​வர் பிரதமர் மோடி. இந்​திய இறை​யாண்​மைக்கு எதி​ராகப் பேசி வரும் சல்மா மீது தேசிய பாது​காப்​புச் சட்​டத்​தில் வழக்​குப் பதிய வேண்​டும்” என்றார்.

சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்​து, சல்மா தனது பதிவை நீக்​கி​னார். இதுகுறித்து சல்​மா​விடம் கேட்​ட​போது, “பாகிஸ்​தான் மத்​தி​யஸ்​தம் செய்​தது என்று நான் சொல்​ல​வில்​லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்​லி​யிருக்​கிறார்.

காங்​கிரஸ் மூத்த தலை​வர் ஜெய்​ராம் ரமேஷ் சொல்​லி​யிருக்​கிறார். அதை​தான் நானும் பதிவு செய்​தேன். ஜெய்​ராம் ரமேஷ் பதிவு செய்​தால் ஒன்​றும் சொல்​ல​மாட்​டார்​கள்.

பெண் என்​ப​தா​லும், இஸ்​லாமியர் என்​ப​தா​லும் தவறான கருத்​துகளை பாஜக​வினர் பதி​விடு​வார்​கள் என்​ப​தால் நானே அந்த பதிவை நீக்​கி​விட்​டேன்’, என்​றார். இந்த விவ​காரம் தற்​போது தமிழக அரசி​யலில் ஆளும் திமுக மற்​றும் எதிர்க்​கட்​சி​யான பாஜக இடையே வார்த்​தைப் போராக மாறியுள்​ளது.

SCROLL FOR NEXT