‘ஜெம்’ வீரமணி

 
தமிழகம்

‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்: குற்றவாளிகளை தப்பவிட்ட பின்னணி

விசாரணைக்கு ஆஜராக மேலும் சிலருக்கு போலீஸார் சம்மன்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் பெரும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்ள ‘ஜெம் கிரானைட்​ஸ்’ நிறு​வனர் ஆர்​. வீரமணி (84) மீதான போக்சோ வழக்கு விவ​காரத்​தில், திடுக்​கிடும் பின்​னணி தகவல்​கள் ஒவ்​வொன்​றாக வெளிவந்து கொண்​டிருக்​கின்​றன.

குழந்தை உரிமை ஆர்​வலர் ஒரு​வர், சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தின் கீழ் உள்ள பாலியல் தடுப்​புப் பிரி​வில் கடந்தாண்டு கொடுத்த புகார் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பென்-டிரைவ் மூலம் ‘ஜெம் கிரானைட்​ஸ்’ நிறு​வனர் வீரமணி சிக்கினார். அதன் பின்னர் அவரது லீலைகள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்தன.

100-க்கும் மேற்பட்ட சிறுமிகள்...

தேனாம்பேட்டையில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களை வரவழைத்து அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள சிறுமிகளுக்கு பணம், செல்போன் மற்றும் ஆடம்பரப் பரிசு பொருட்களை கொடுத்து வீரமணி, தனது பாலியல் இச்சைகளை தீர்த்துள்ளார். இவரால் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் வீரமணியின் தேனாம்பேட்டை வீட்டை கவனித்து வந்த அவரது உதவியாளர்கள் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக வீரமணி, சிறுமிகளுடன் இருந்த ரகசிய வீடியோக்களை வைத்திருந்தவரும், 23 ஆண்டுகள் ஜெம் கிரானைட்ஸில் பணிபுரிந்தவரும், தற்போது பாலாஜி குளோபல் எண்டர் பிரைசஸில் பணிபுரியும் கணேசன் என்பவரை போலீஸார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

காவல்துறை வழக்கின் பின்னணி

வீரமணியின் பாலியல் குற்றங்கள் தொடர்பாக 06.10.2025 அன்று புகார் அளிக்கப்பட்டது. மறுநாள் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

அதன் பின்னர் வீடியோவில் பதிவாகி இருந்த விவரம் குறித்து வீரமணியிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். ஆனால், சிறுமிகளுடன் உள்ள நபர் நான் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தேனாம்பேட்டை வீட்டில் இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கனிடம் விசாரிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் அதுபோன்ற குற்றச் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளனர்.

அதே பகுதியில் உள்ள கண் மருத்துவமனை பணியாளர், பஞ்சர் கடைக்காரரிடமும் போலீஸார் விசாரித்துள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு வெளியாட்கள் யாரும் வருவதில்லை என தெரிவித்துள்ளனர்.

இவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த போலீஸார், ஆழமாக விசாரிக்காமல் வழக்கை ரத்து செய்யும்படி நீதிமன்றத்தை நாடினர்.

அப்போது, அவர்கள் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், வீடியோவில் உள்ள முதியவரைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்ட நிலையில் பதிவில் உள்ள நபரை பற்றிய தகவல் ஏதும் கண்டறிய இயலவில்லை.

மேலும் கிடைக்கப்பெற்ற வீடியோ பதிவு 2019-ம் ஆண்டில் பதிவாகி உள்ளது. சைபர் க்ரைம் நிபுணர்களை வைத்து சோதனை செய்தபோது 6 ஆண்டுகள் கடந்து விட்டதால் அடிப்படை பதிவு இல்லை என தெரிவிக்கப்பட்டது.

புகாரில் சொல்லப்பட்ட சந்தேக நபர்கள் இதற்கு முன்பு ஏதேனும் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவ்வாறு இல்லை என தெரியவருவதால், இந்த வழக்கை முன்னெடுத்து செல்ல முகாந்திரம் இல்லாததால் வழக்கை கைவிடுவதாக 18.02.2026 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனால், கோபம் அடைந்த நீதிபதி வழக்கை கைவிட முடியாது என தெரிவித்து, மீண்டும் போலீஸார் தற்போது விசாரணை நடத்தியபோதுதான் வீரமணி மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், வீரமணியை மிரட்டி பணம் பறித்த கும்பல், சிறுமிகளை வேட்டையாடிய தொழில் அதிபர்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையை முதல்வர் விஜய்யிடம் தனிப்படை போலீஸார் விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT