ராஜகோபால்

 
தமிழகம்

பெண்ணுக்கு ஆபாச தகவல் அனுப்பிய சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

பழநி: ​திண்​டுக்​கல் அருகே காவல் நிலை​யத்​துக்​குப் புகார் அளிக்க வந்த பெண்​ணுக்கு ஆபாச தகவலை அனுப்​பிய சார்பு ஆய்​வாளர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார்.

பழநி அரு​கே​யுள்ள பாப்​பம்​பட்​டியைச் சேர்ந்த பெண் ஒரு​வர் அடிதடி பிரச்​சினை தொடர்​பாக நெய்க்​காரப்​பட்​டி​யில் உள்ள தாலுகா காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கச் சென்​றார். அப்​போது அங்கு பணி​யில் இருந்த சார்பு ஆய்​வாளர் ராஜகோ​பாலை சந்​தித்து புகார் அளித்​தார். அதன்​பேரில், ராஜகோ​பால் விசா​ரணை நடத்​தி​னார். இந்​நிலை​யில், அந்​தப் பெண்​ணின் வாட்ஸ்அப்​பில் ஆபாச​மாக ராஜகோபால் தகவல் அனுப்​பி​யுள்​ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்​தப் பெண் தனது குடும்​பத்​தா​ரிடம் இதுபற்றி தெரி​வித்​தார்.

இதைத் தொடர்ந்து பெண்​ணின் குடும்​பத்​தினர் திண்​டுக்​கல் சரக டிஐஜி சசிமோகன், எஸ்பி பிரதீப் மற்​றும் பழநி டிஎஸ்பி தனஞ்​ஜெயன் ஆகியோரிடம் புகார் அளித்​தனர். இது தொடர்​பாக காவல்​துறை அதி​காரி​கள் நடத்​திய விசா​ரணை​யில் சார்பு ஆய்​வாளர் ராஜகோ​பால், புகார் அளிக்க வந்த பெண்​ணுக்கு ஆபாச​மாக தகவல் அனுப்​பியது உறு​தி​யானது. இதையடுத்​து, அவர் ஆயுதப்​படைக்கு மாற்​றப்​பட்​டார். இந்​நிலை​யில் டிஐஜி உத்​தர​வின் பேரில் ராஜகோ​பால் நேற்று பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார்.

SCROLL FOR NEXT