பந்தலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புத்தூர் வயல் கிராமத்தைச் சேர்ந்த ஷாஜகான் மகன் மிஸ்ஹாப் (14). 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும்போது திடீரென சாலைக்கு வந்த ஒரு யானை, மிஸ்ஹாப்பை தாக்கியது. இதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து வனவிலங்குகள் தாக்குதலில் இருந்து காக்க வலியுறுத்தி பிதர்காடு அருகே மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து நெலாக்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.