தமிழகம்

நகர்ப்புற கழிவுகளை கிராமங்களில் கொட்ட திட்டமா? - திடக்கழிவு மேலாண்மை பொறுப்பு மாற்றத்துக்கு கடும் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: திடக்கழிவு மேலாண்மை பொறுப்பு ஊரக வளர்ச்​சித் துறைக்கு மாற்​றப்​பட்​ட​தால், நகர்ப்​புற கழி​வு​களை கிரா​மங்​களில் கொட்​டப்​படும் அபா​யம் உள்​ள​தாக ஊரக வளர்ச்​சித் துறை ஊராட்சி நிர்​வாகங்​களும் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன.

தமி​ழ​கத்​தில் திடக்​கழிவு மேலாண்​மையை மேம்​படுத்​து​வதற்​காக, சிறப்​புத் திட்ட செய​லாக்​கத் துறை​யின் கீழ் ‘க்​ளீன் தமிழ்​நாடு கம்​பெனி லிமிடெட்’ (CTCL) மற்​றும் ‘தூய்மை இயக்​கம்’ செயல்​பட்​டு​ வந்​தன. நிர்​வாக வசதிக்​காக இவற்​றின் ஒட்​டுமொத்த செயல்​பாடு​களை​யும் ஊரக வளர்ச்​சித் துறைக்கு மாற்றி தமிழக அரசு சமீபத்​தில் அரசாணை வெளி​யிட்​டது.

அரசின் இந்த முடிவுக்கு தற்​போது ஊரக வளர்ச்​சித் துறைக்​குள்​ளேயே கடும் அதிருப்​தி​கள் எழுந்​துள்​ளன. இதுகுறித்து ஊரக வளர்ச்​சித் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: தமி​ழ​கத்​தில் உள்ள 25 மாநக​ராட்​சிகள், 146 நகராட்​சிகள் மற்​றும் 479 பேரூ​ராட்​சிகளில் தின​மும் உரு​வாகும் பல்​லா​யிரம் டன் திடக்​கழி​வு​களை அந்​தந்த நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​களே கையாண்டு வந்​தன.

இவற்றை ஒருங்​கிணைத்து நவீன முறை​யில் செயல்​படுத்​து​வதற்​காகவே முந்​தைய திமுக ஆட்​சி​யில் சிறப்​புத்​திட்ட செய​லாக்​கத் துறை​யின் கீழ் ‘க்​ளீன் தமிழ்​நாடு கம்​பெனி’ உரு​வாக்​கப்​பட்​டது.

ஆனால், தவெக ஆட்​சி​யில் நகர்ப்​புற குப்​பைகளை கையாளும் பொறுப்பு ஊரக வளர்ச்​சித் துறைக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. இது நகர்ப்​புறங்​களில் சேரும் குப்​பைகளை கையாளும் பொறுப்பை கிரா​மங்​களின் தலை​யில் கட்​டு​வதற்கே வழி​வகுக்​கும்.

இந்​தச் சிக்​கல்​களை தவிர்க்​கவே சென்​னை, நீல​கிரி தவிர மற்ற 36 மாவட்​டங்​களில் நகரங்​களை ஒட்​டி​யுள்ள 673 ஊராட்​சிகளில் குடிநீர், சாலை, வடி​கால் மற்​றும் திடக்​கழிவு மேலாண்​மையை மேம்​படுத்​து​வதற்​காக ‘நகர்ப்​புற வளர்ச்சி இயக்​குநரகம்’ என்ற புதிய அமைப்பை உரு​வாக்​கும் பணி​கள் நடந்​து​வந்​தன.

ஆனால், அதை நிறுத்​தி​விட்டு நகர்ப்​புற திடக்​கழி​வு​களை கையாளும் பொறுப்பை எங்​களிடம் கொடுத்​தது ஏற்​புடையதல்ல.

ஏற்​கெனவே கிராம ஊராட்​சிகளில் சேரும் குப்​பைகளை முறைப்​படி தரம் பிரித்து கையாள போது​மான நிதி இல்​லை. இதனால் பல்​வேறு ஊராட்​சிகளில் ஏரி, குளங்​கள் போன்ற நீர்​நிலை​களில்​தான் குப்​பைகள் கொட்​டப்​படு​கின்​றன.

தற்​போது நகர்ப்​புற கழி​வு​களை​யும் கிரா​மங்​களை நோக்கி திருப்​பி​னால், அவை குப்​பைக் கிடங்​கு​களாக மாறி​விடும். எனவே, இந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT