தமிழகம்

சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: சுதந்​திர தினத்​தில் மது​பானம் விற்​பனை செய்​யக்​கூ​டாது, மீறி​னால் கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என மாவட்ட ஆட்​சி​யர் எஸ்​.​மாலதி ஹெலன் எச்​சரித்​து வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சுதந்​திர தினம் ஆக.15-ம் தேதி (நாளை) கொண்​டாடப்படு​கிறது.

இதை முன்​னிட்டு சுதந்​திர தினத்​தன்று தமிழ்​நாடு மது​பான சில்​லறை விற்​பனை விதி​கள், தமிழ்​நாடு மது​பான விதி​கள் ஆகிய​வற்​றின் கீழ் சென்னை மாவட்​டத்​தில் உள்ள அனைத்து டாஸ்​மாக், மது​பான சில்​லறை விற்​பனைக் கடைகள் மற்​றும் பார்​கள், எஃப்​எல்.2 உரிமம் பெற்ற கிளப் பார்​கள், எஃப்​எல்.3 உரிமம் பெற்ற ஹோட்​டல் பார்​கள், மது​பான விற்​பனையகங்​கள், மது​பான கூடங்​கள் என அனைத்​தும் கண்​டிப்​பாக மூடப்​பட்​டிருக்க வேண்​டும்.

சுதந்​திர தினத்​தில் மதுபானம் விற்​பனை செய்​யக்​கூ​டாது. மீறி விற்​பனை செய்​தால் மது​பான விற்​பனை விதி​களின்​படி கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT