தமிழகம்

போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க சென்னையில் இன்று ‘கடும் நடவடிக்கை தினம்’ - சிக்கினால் உடனடியாக வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: ​போக்குவரத்து போலீ​ஸார் சென்னை முழு​வதும் ஒரே நேரத்​தில் வாகன தணிக்கை மேற்​கொண்டு விதி மீறலில் ஈடு​படும் வாகன ஓட்​டிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்​ளனர்.

சென்னை பெருநகரில் சாலைப் பாது​காப்பை மேம்​படுத்​தும் வகை​யில், போக்​கு​வரத்து விதி​மீறல்​களுக்கு எதி​ராக இன்று (சனிக்​கிழமை) ‘வி​தி​மீறல்​களற்ற நாள்’ (ஜீரோ டாலரன்ஸ் டே) கடைபிடிக்​கப்​படு​கிறது.

இதையொட்​டி, சென்னை பெருநகரில் உள்ள அனைத்து முக்​கிய சாலைகள் மற்​றும் பிர​தான சாலைகளில் சிறப்​புத் தணிக்கை மேற்​கொள்​ளப்பட உள்​ளது.

அப்​போது போக்​கு​வரத்து விதி​களை மீறிச் செல்​லும் வாகன ஓட்​டிகள் மீது வழக்​குப்​ப​திவு செய்து நடவடிக்கை எடுக்​கப்​படும் எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து சென்னை போக்​கு​வரத்து போலீ​ஸார் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: பொது​மக்​கள் அனை​வரும் போக்​கு​வரத்து விதி​களை முறை​யாகக் கடை​பிடிக்க வேண்​டும்.

போக்​கு​வரத்து சிக்​னல்​களை மதித்து நடக்க வேண்​டும். இருசக்கர வாக​னங்​களில் செல்​வோர் கட்​டா​யம் தலைக்​கவசம் அணிய வேண்​டும்.

நான்கு சக்கர வாக​னங்​களில் பயணிப்​போர் இருக்​கைப் பட்டை அணிய வேண்​டும். மேலும், அதிவேக​மாக​வும், ஆபத்​தான முறை​யிலும் வாக​னங்​களை ஓட்​டு​வதைத் தவிர்க்க வேண்​டும்.

வாக​னம் ஓட்​டும்​போது செல்​போனை பயன்​படுத்​தக் கூடாது. இது​போன்ற விதி​மீறல்​களில் ஈடு​படு​வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

சாலை விபத்​துகளைத் தடுப்​பதும், பாது​காப்​பான பயணத்தை உறுதி செய்​வதும் போக்​கு​வரத்​துக் காவல்​துறை​யின் முக்​கிய நோக்​க​மாகும். மனித உயிர் விலைம​திப்​பற்​றது.

எனவே, பொது​மக்​கள் போக்​கு​வரத்து விதி​களை முறை​யாகப் பின்​பற்​றி, ‘வி​தி​மீறல்​களற்ற நாள்’ நடவடிக்கை வெற்​றி​பெற போக்​கு​வரத்​துக் காவல்​துறைக்கு முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும். இவ்​வாறு போக்​கு​வரத்​து போலீ​ஸார்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT