தமிழகம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

வேட்டையன்

சென்னை: வரும் 19-ம் தேதி அன்று திமுக முப்பெரும் விழா அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 15-ம் தேதி நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததையொட்டி, தற்போது திமுக முப்பெரும் விழா வருகிற 19-ம் தேதி (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில், அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக முப்பெரும் விழா:

திமுக சார்​பில் ஆண்​டு​தோறும் செப்​டம்​பர் மாதத்​தில் முப்​பெரும் விழா கொண்​டாடப்​படு​வது வழக்​க​மாகும். அண்ணா பிறந்​த​நாள், பெரி​யார் பிறந்​த​நாள் மற்​றும் திமுக தொடங்​கிய நாள் ஆகிய​வற்றை இணைத்து முப்​பெரும் விழா​வாக கொண்​டாடப்​பட்டு வருகிறது.

அதன்​படி நடப்​பாண்டு திமுக முப்​பெரும் விழா சென்னை அறிவால​யத்​தில் கடந்த 15-ம் தேதி நடத்த திட்​ட​மிடப்​பட்​டது. இதில் திமுக தலை​வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்​தினராக கலந்​து​கொண்​டு, கட்​சி​யில் சிறப்​பாக செயலாற்​றிய மூத்த முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்​று​வார் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு திடீர் உடல்​நலக்குறைவு ஏற்​பட்​ட​தால், 15-ம் தேதி நடை​பெற இருந்த ‘முப்பெரும் விழா’ ஒத்​திவைக்​கப்​பட்​டது. தற்போது மாற்று தேதி அறிவிக்கப்பட்டு வரும் சனிக்கிழமை இந்த விழா நடைபெறுகிது.

SCROLL FOR NEXT