கோவை: பெரியார் அறிவுலகம் அமைத்ததற்காக கோவையில் தி.க. சார்பில் இன்று நடைபெறும் பாராட்டு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
கோவை அவிநாசி சாலை நீலாம்பூர் பகுதியில் 50 சென்ட் பரப்பளவில் கோவை மாவட்ட திமுகவுக்கு புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த அலுவலகத்துக்கு இன்று (நவ.4) காலை 11 மணிக்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை தொடங்கி வைக்கிறார்.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ரூ.300 கோடி மதிப்பில், காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் பெரியார் அறிவுலகம் எனப்படும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. இதை சமீபத்தில் முதல்வர் விஜய் திறந்துவைத்தார்.
கோவையில் பெரியார் பெயரில் அறிவுலகத்தை கட்டித் தந்ததற்காக திராவிடர் கழகம் சார்பில் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. கோவை வஉசி மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் விழாவில் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு கோவை வருகிறார். இரு நிகழ்வுகளையும் முடித்துக் கொண்டு இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்புகிறார்.