சென்னை: திமுக முன்னாள் அமைச்சர்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் ரெய்டுகளை கண்டு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநில மாகத் தமிழகத்தை மாற்றிவிட்ட முதல்வர், மக்களின் கவனத் தையும், ஊடகங்களின் பிரேக்கிங் நியூஸ்-ஐயும் திசைதிருப்ப ரோடுஷோ நடத்தலாமா, ரெய்டு ஷோ நடத்தலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
திமுக முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் ‘Vettri Vendetta Politics’ திட்டம் வழக்கம்போல சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் வீடியோக்களைத் தயாரிக்க நடத்தப்படும் இந்த ரெய்டுகளை கண்டு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது.
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த தவெக ஆட்சியைக் கண்டு, தமிழகம் மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது.
இதை எல்லாம் மறைக்க, திமுகவினருக்கு வாய்ப்பூட்டு போட லாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாக தவெக அரசின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.