தமிழகம்

சிறுமிக்கு ரூ.25 லட்சம் மதிப்பு சிகிச்சையை அளித்த சென்னை அரசு மருத்துவமனைக்கு ஸ்டாலின் பாராட்டு

மோகன் கணபதி

சென்னை: சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக 25 லட்ச ரூபாய் சிகிச்சையை அளித்துள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக் குழுவினருக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘‘சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக 25 லட்ச ரூபாய் சிகிச்சையை அளித்துள்ள நம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக் குழுவினரைப் பாராட்டுகிறேன்!

          

இத்தகைய சாதனைகள் தொடர, கடைக்கோடி மக்களுக்கும் உயர்தர சிகிச்சையை உறுதிசெய்ய, அமையவுள்ள திராவிட மாடல் 2.O ஆட்சியில், மருத்துவக் காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்வு, சென்னை, காஞ்சிபுரம் போன்று, பிற வட்டாரங்களிலும் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள்

தஞ்சாவூர், தருமபுரி, விழுப்புரத்தில் உயர்சிறப்பு மருத்துவமனைகள், மண்டல அளவில் கருத்தரிப்பு மையங்கள், மாவட்ட & வட்ட அளவிலான மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவிகளின் எண்ணிக்கை

இருமடங்காக்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை #StalinStatement என வழங்கியிருக்கிறேன்!

நலமான தமிழ்நாடு 2030-க்கு வெல்வோம் ஒன்றாக!’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT